பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகை அளிக்கவல்ல இறைவன் பட்டீசர் பச்சைநாயகியுடன் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆதலால் பேரூர் என்று பெயர் பெற்றது பொருத்தந்தான். இந்தக் கோயிலில் நுழைந்து கொஞ்சம் நடந்ததும் நம் கண்முன் வருவது வெள்ளி மன்றம்தான். இது கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம், 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உள்ள இந்த மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கற்றுண்கள் தாங்கி நிற்கின்றன என்றால் மண்டபத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த மண்டபந்தான் பேரூரின் பெருஞ் சிறப்புக்கே காரணமானது.

அந்த மண்டபத்தை ஒட்டித்தான் சிற்றம்பலம் இருக்கிறது. அங்குதான் நடராஜர் அன்னை சிவகாமியுடனும் கோமுனி பட்டி முனியுடனும் கொலுவிருக்கிறார். இந்த நடராஜனை ஆடவல்லான் என்றே அழைத்திருக்கின்றனர். ராஜராஜ சோழன் கட்டிய அந்த தஞ்சைப் பெரு உடையார் கோயிலிலே இருக்கும் ஆடவல்லான் நமக்கு முன்னரே அறிமுகமானவன். அடுத்த ஆடவல்லானை இக்கொங்கு நாட்டில்தான் காண்கிறோம். இந்த ஆடவல்லான் தமிழ் நாட்டில் உள்ள நடராஜத் திருவுருவங்களில் சிறந்த ஒன்று. நடராஜருக்கும் சிவகாமிக்கும் வெள்ளிக் கவசம் எல்லாம் சாத்தி எப்போதுமே அலங்கரித்து வைத்திருப்பார்கள். நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும் காலம் அறிந்து சென்று ஆனந்திக்கலாம்.

இந்த ஆடவல்லானின் சந்நிதியை அழகு செய்யும் எட்டுத் தூண்களில் எட்டு சிலைவடிவங்கள். ஆகு வாகனத்தில் ஐங்கரன், மயில் வாகனத்தில் அறுமாமுகன், இரண்டு தூண்களில் இன்னும் இரண்டு தூண்களில் அக்கினி வீரபத்திரன், அகோர வீரபத்திரன். மற்றும் இன்னும் இரண்டு தூண்களில் கஜசம்ஹாரனும் பிக்ஷாடனனும். இவை தவிர ஊர்த்துவதாண்டவ மூர்த்தியும் ஆலங்காட்டுக் காளியும் எதிர்