பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

வேங்கடம் முதல் குமரி வரை

எதிரே. இந்தச் சிற்ப வடிவங்கள் சோழர் காலத்திய சிற்பத்துக்கு ஈடுகொடுப்பவை அல்ல. சிற்பக்கலை வளர்ச்சி குன்றி வருகின்ற பதினாறாம் நூற்றாண்டிலே சிறப்பாக எழுந்திருக்கின்றன. இச் சிற்ப வடிவங்களைப் பற்றி பெர்கூஸன் என்ற கலா விமர்சகர், 'பேரூர் வெள்ளி மன்றத்துச் சிற்பங்கள் சிற்பக்கலை மலினமடைந்த காலத்தில் உருவானவை. என்றாலும், அவை சிற்பக்கலை உச்ச நிலையில் உயர்ந்து விளங்கிய உன்னத காலத்தைச் சேர்ந்தவைதாம்' என்று கூறுகிறார். இந்த விமரிசனமே இச்சிற்ப வடிவங்களின் சிறப்புக்குத் தக்க சான்று பகர்வதாகும்.

இச்சிற்ப வடிவங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆடவல்லான் இருக்கும் அம்பலத்தின் முகப்பை நோக்கினால் ஓர் அதிசயம் காண்போம். அங்கு இரண்டு கல் தூண்கள், ஒரு தூணிலே குதிரைமீது ஆரோகணித்து வரும் வீரன் ஒருவன் கம்பீரமாகக் காட்சி கொடுப்பான். அதற்கொப்ப இருக்கும் மற்றொரு தூணிலே குதிரையின் கால் இருக்கும், அதன் வால் இருக்கும். ஆனால் குதிரையையோ, வீரனையோ காண இயலாது. 'எப்படி அந்தத் தூண்சிதைந்தது?' என்று விசாரித்தால் ஓர் அழகிய கதையைச் சொல்வார்கள் அங்குள்ளவர்கள்.

கதை இது தான் : இந்த வெள்ளி மன்றத்தை மதுரை திருமலை நாயக்கரது சகோதரனான அளகாத்திரி நாயக்கன் நிர்மாணிக்க ஆசைப்பட்டிருக்கிறான். மண்டபம் கட்டும் வேலைச் சிற்பி கம்மனாச்சாரியிடம் ஒப்படைத்திருக்கிறான். ஸ்தபதியும் இரவு பகல் ஓயாது உழைத்து, அழகான சிற்ப வடிவங்களை அமைத்து மண்டபம் கட்டி முடித்திருக்கிறான். மண்டபம் கட்டி, அதன் குடமுழுக்குக்கு நாளும் குறித்திருக்கிறான் அளகாத்திரி நாயக்கன். அந்த நிலையிலே அங்கு வந்த ஓர் இளைஞன் இந்த மண்டபத்தை எல்லாம் கண்டு களித்துவிட்டு, இப்போது சிதைந்திருக்கும் தூணைப் பார்த்து, ஐயோ!' என்று அலறியிருக்கிறான். அப்படி அவன்