பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

வேங்கடம் முதல் குமரி வரை

ஊர்த்துவ தாண்டவர் - பேரூர்

பிப்பிலாரண்யம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. காமதேனுவே இங்கு வந்து பட்டியிட்டு இறைவனைப் பூசித்திருக்கிறது. ஒருநாள் பசுவாகிய காமதேனுவின் இளங்கன்று இக்காட்டில் துள்ளிக் குதித்து அங்குள்ள மணல் புற்றில் வந்து சிக்கியிருகின்றது. கன்றை - விடுவிக்கும் ஆவலில் காமதேனு வந்து கொம்பால் குத்திப் புற்றை அகற்றி யிருக்கிறது. புற்றிடம் கொண்ட இறைவன் அன்று வெளிவந்திருக்கிறான். கன்றுக்குட்டியின் கால் தழும்பும், காம தேனுவின் கொம்புத் தழும்பும் உடையவனாக, பட்டீசனாக இருந்தவன் கோட்டீசன் என்றும் பெயர் பெற்றிருக்கிறான். கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் நாம் விரும்பினால் தமிழிலேயே அருச்சனை செய்வார்கள், அருச்சனை எல்லாம் முடித்துக்கொண்டு வெளிவந்து ஒரு சுற்றுச் சுற்றி, பச்சை நாயகியார் கோயிலுக்கு வரலாம். பச்சை நாயகி - மரகதவல்லி நல்ல அழகொழுகும் வடிவம். தனிக்கோயிலில் அவள் இருக்கிறாள். தன் சகோதரனான வரதராஜப் பெருமாளுக்கும் தன் கோயிலிலேயே கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாள். இந்த அம்மாள் கோயிலுக்கும் சுவாமி