பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேங்கடம் முதல் குமரி வரை

ஏன், பின்னர் பரசுராமனது கர்வத்தை அடக்கிய நாளிலும் பெற்ற மகிழ்ச்சியைவிடத் தம் மந்திரிக் கிழவர்கள் அவனைப் பாராட்டியபோது பெற்ற மகிழ்ச்சி பெரிதாக இருந்தது. இதைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழகாகப் பாடுகிறான்.

மற்று, அவன் சொன்ன
வாசகம் கேட்டலும்; மகனைப்
பெற்ற அன்றினும், பிஞ்ஞகன்
பிடித்த அப் பெருவில்
இற்ற அன்றினும் எறி
மழுவாளன் இழுக்கம்
உற்ற அன்றினும், பெரியது ஓர்
உவகையன் ஆனான்.

இந்தப் பாட்டைப் படிக்கும்போது, வள்ளுவர் சொன்ன,

ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் - தன் மகனைச் .
சான்றோன் எனக் கேட்ட தாய்!

என்ற குறள் ஞாபகத்துக்கு வராமல் போகாது. இப்படிப் பெற்ற தாய் மகிழ்கிறாள்; பெற்ற தந்தை மகிழ்கிறார், தம் மகனைப் பிறர் சான்றோன் என்று சொல்லக் கேட்டபோது. ஆனால் தம் பிள்ளையையே குருவாக ஏற்றுக் கொண்ட தந்தை ஒருவரும் உண்டு. அவரைப் பற்றி இந்த வள்ளுவரும் கம்பனும் ஒன்றுமே சொல்கின்றார்கள் இல்லை. 'தம்மில் தம் மக்கள் அறிவுடையராக' இருப்பதைப் பெற்றோர் விரும்புவது இயல்பு. ஆனால் பிள்ளையே தனக்குக் குருவாக முனைந்து எழுவதை எந்தத் தந்தையும் விரும்புவதில்லை. ஆனால் இறைவனாகிய தந்தை எல்லாத் தந்தைகளுக்கும் மேம்பட்டவராயிற்றே.

இறைவனாகிய தந்தைக்கும் பிரணவத்தின் பொருள் உரைக்கிறேன் என்று குமரனாம் பிள்ளை .கூறியபொழுது, 'சரி