பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

39

கிடைக்கவில்லை. உடுக்க உடையில்லை. அடங்கி ஒடுங்கி ஒரு தேர் முட்டியில் விழுந்து கிடக்கிறார். இரவு நடுச்சாமம். வான வீதியில் நாரைகள் தெற்கு நோக்கிப் பறந்து செல்வதைப் பார்க்கிறார். கவிதை பிறக்கிறது உள்ளத்தில். சுரக்கும் கவிதை ஊற்று வற்றி விட வில்லையே. தம் நிலையைப் போய்ச் சக்திமுற்றத்தில் இருக்கும் தம் மனைவிக்குச் சொல்ல வேண்டுகிறார் நாரையை. பாட்டு இதுதான்:

நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்,
எம்மூர் சக்திமுத்த வாவியுள் தங்கி
நனை சுவர்க் கூறை கனை குரல் பல்லி
பாடு பார்த்திருக்கும் எம்மனைவியைக் கண்டே
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து,
கையது கொண்டு மெய்யது பொத்தி,
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டதும் எனுமே.

இந்த நாரைவிடு தூதைக் கேட்கிறார் நகர் சோதனைக்கு வந்த பாண்டிய மன்னன். கவிஞனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உண்டி, உடை முதலியன கொடுத்து மேலும் வேண்டும் திரவியங்களெல்லாம் கொடுத்து அவன் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். கவிஞனது வறுமையைப் போக்கி யிருக்கிறது இந்தப் பாட்டு. கவிதை உலகுக்கு ஒரு நல்ல பாட்டை உதவியிருக்கிறார் கவிஞர். இவரால், இவர், பாட்டால் இலக்கியப் பிரசித்தி பெற்றிருக்கிறது ஒரு சிறு ஊர், அந்த ஊர்தான் சக்திமுற்றம். அந்தச் சக்திமுற்றம் அதை