பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

43

துணிவு வராது. என்றாலும் அங்குள்ள படிக்கட்டுகளிலே செதுக்கப்பட்டிருக்கும் பிரகலாத சரித்திரச் சிற்பங்களைக் காணாமல் நமக்குத் திரும்பவும் மனம் வராது. நரசிம்மன் இரணியன் போரில் பல காட்சிகள். கோயிலை வலம் வந்தால் நெருஞ்சிமுள் நம் காலைப் பதம் பார்க்கும். கருவறைக்குப் பின்னுள்ள சவரில் ஓர் அர்த்தநாரீசுவரர், அதையும் பார்த்துவிட்டுக் கோயிலுள் நுழைந்தால் முன் மண்டபத்திலேயே கயிலாய நாதர் நமக்குக் காட்சி கொடுப்பார். அவர் சாதாரணக் கயிலை நாதர் அல்ல.

மறு உற்ற பலர்க் குழவி
மடவார் அஞ்ச மலை துளங்க
திசை நடுங்கச் செறுத்து நோக்கி
செறுஉற்ற வாள் அரக்கன்
வவிதான் மாளத்திரு அடியின்
விரல் ஒன்றால் அலற ஊன்றிய

கயிலைநாதர் அல்லவா? ராவணன் கயிலையின் அடியில் கிடந்து நைவது, அம்மை அஞ்சி அத்தனை அணைவது, அத்தனோ அமைதியாய் இருப்பது எல்லாம் மிக்க அழகாகச் சிலை உருவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்ததுமே முன்னர் குத்திய முள்ளின் வலி எல்லாம் மறைந்து போகும். இன்னும் கோயில் அர்த்த மண்டபம் நுழைந்து அங்கு 'கானத்து எருமைக் கருந்தலைமேல் நிற்கும்' அந்தக் கரிய துர்க்கையையும்