பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

45

கோயிலை நான்கு கோபுரங்கள் அலங்கரிக்கின்றன. மேலப் பிரகாரத்தில் கருவறைக்குத் தெற்கே சண்முகர் வள்ளி தெய்வயானையோடு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். நல்ல கம்பீரமான திருஉரு. இந்தக் கோயிலில் பார்க்க வேண்டிய கற்சிலை பைரவர் திரு உருவம். கண்டாரை அஞ்சவைக்கும் கோலம்; பெரிய வடிவம். இவற்றை எல்லாம்விட வடக்கு வாயிலில் கோயில் கொண்டிருக்கும் துர்க்கையே இங்குள்ள பிரபலமான தேவதை. எட்டுக் கரங்கள், சூலம், தனு, கசம், அங்குசம், சங்கு ஏந்திய கோலம், மகிஷன் தலைமேல் ஏறி நிற்கிறாள்.

ஏழு எட்டு அடி உயரத்தில் கருணை பொழியும் வதனம், அவள் பெரிய வரப்பிரசாதி என்பதைக்காட்டும். பழைய சோழ மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். சோழ மாளிகையின் காவல் தெய்வமாக நின்றவளையே இக்கோயில் கோட்டை வாயில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். பட்டீச்சுரம் கோயிலில் யாரைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் துர்க்கையைத் தரிசியாது வந்து விடாதீர்கள்.

தேனுபுரீசுவரரை வணங்கிவிட்டு அடுத்துள்ள தனிக்கோயிலில் இருக்கும் பல்வளை நாயகியையும் சென்று வணங்கலாம். இங்கு மகாமண்டபத்தில் தம்பதிகள் இருவர் இருப்பர். அவர்களே நாயக்க மன்னரிடம் அமைச்சராக இருந்த கோவிந்தப்ப தீக்ஷிதரும் அவர் மனைவியும், இவரே இக்கோயிலின்பெரும் பகுதியைத் திருப்பணி செய்திருக்கிறார்.

இனிக் கொஞ்சம் வடக்கு நோக்கி நடந்தால் சக்தி முற்றம் வந்து சேரலாம். சக்திமுற்றம் இயற் பெயரா? காரணப் பெயரா? என்று ஒரு கேள்வி. இயற் பெயரே என்பர் ஒரு சிலர். ஆனால் கோயில் நிர்வாகிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அன்று கம்பை நதிக் கரையில் அம்மை தவ்ஞ்செய்ய, அப்போது ஆறு பெருகிவர அதற்கு அஞ்சாது அம்மை பூஜித்த லிங்கத்தையே கட்டித் தழுவ, அதனால்