பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. விண்ணகர் ஒப்பிலியப்பன்

க்த குசேலர் கதை நாம் அறிந்த ஒன்று. அதிலும் குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஏகமாகப் பிரசாரம் நடக்கும் இந்நாளில் அவரது கதையை அறியாதிருப்போமா? அப்படி யாராவது தெரியாதிருந்தால் அவர்களுக்காகவே சொல்கிறேன். அவந்தி நகரிலே சுதாமா என்று ஓர் அந்தணர். அவருக்குச் சுசீலை என்று ஒரு மனைவி, இவர்களுக்கு இருபத்து ஏழு பிள்ளைகள், பின்னர் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடக் கேட்பானேன்? கூழுக்கும் கஞ்சிக்கும் ஏக அடிபிடி சுதாமாவோ எதிலுமே பற்றுடையவராக இல்லை. உண்ணும் உணவிலே பற்றாக்குறை என்றால், உடுக்கும் உடையைப் பற்றிக் கேட்கவாவேணும், ஏதோ கிழிந்த துணிகளை ஒட்டுப்போட்டு அணிந்திருப்பார். அப்படிப் பொலிவற்ற ஆடை அணிந்தது காரணமாகவே குசேலர் என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே நிலைக்கவும் செய்தது.

இந்தக் குசேலரை ஒருநாள் அவரது மனைவி அணுகினாள். உண்ண உணவின்றி மக்கள் தவிப்பதை எடுத்துக் கூறினாள், முன்னாள் சாந்தீப முனிவரிடம் அவரோடு ஒரு சாலை மாணாக்கனாக இருந்த கண்ணன்