பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

59

கடர்த்தொடீஇ! கேளாம். தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து. வரிப்பந்து கொண்டு ஓடி
நோதக்கசெய்யும் சிறுபட்டி, மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா. இல்லிரே!
உண்ணும் நீர் வேட்டேன் என வந்தாற்கு, அன்னை அடல்பொன் சிரகத் தால்வாக்கி சுடரிழாய்!
உண்ணும் நீர் ஊட்டிவா என்றாள் ; என, யானும்
தன்னை அறியாது சென்றேன். மற்று என்னை வளைமுன்கை பற்றிநலிய, தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்ததுகாண் என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
உண்ணும்நீர் விக்கினான் என்றேனா, அன்னையும் தன்னைப்புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான், அக்கள்வன் மகன்

என்பது பாட்டு. பெண் எப்படித்தன் காதலைத் தோழியிடம் "நைஸாக' வெளியிடுகிறாள் என்பதை அறிந்து அறிந்து அனுபவிக்கிறோம் பாட்டைப் படிக்கிறபோதெல்லாம்.

இந்தக் 'கள்வன் மகன்' செய்த சிறு குறும்பையே அந்தக் கள்ளக் கண்ணனுமே செய்திருக்கிறான். கதை இதுதான் : திருநறையூர் என்னும் தலத்திலே மேதாவி முனிவர் இருந்து தவம் செய்கிறார். அவருடைய ஆசையெல்லாம் திருமாமகள், தனக்கொரு மகளாகப் பிறக்க வேண்டும் என்பதுதான், அவர் விரும்பிய வண்ணமே திரும்களும், முனிவரது பர்ணசாலையின் அருகிலே வஞ்சுள மரத்தடியில் சிறு குழந்தையாக அவதரிக்கிறாள். முனிவரும் அவளை எடுத்து வஞ்சுள வல்லி என்று பெயரிட்டு வளர்க்கிறார். அவளும் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள். அந்த நாராயணன் தான் எத்தனை நாட்களுக்குத் திருமகளைப் பிரிந்து