பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருப்பான்? (ஆம், இந்த பக்தர்கள் விரும்பும்போதெல்லாம் தான் பூதேவியும் சீதேவியும் ஏன் அந்த உமையும் கூடத் தங்கள் புருஷன் மாரைத் தவிக்க விட்டுவிட்டு, பூலோகத்தில், வந்து அவதரித்து விடுகிறார்களே! அத்தனை அன்பு தம் பக்தர்களிடம் அவர்களுக்கு, தம் கணவரிடம் வைத்திருக்கும் அன்பை விட). அவளைத் தேடிக் கொண்டு பூலோகத்திற்கு வருகிறான் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என்று ஐந்து உருத் தாங்கி வருகிறான். இந்தப் பஞ்ச வியூகப் பரமர்களையும் மேதாவி முனிவரது சீடர்கள் மணிமுத்தாற்றின் கரையிலே சந்தித்து முனிவரது ஆசிரமத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

ஐவரையும் அதிதிகளாக ஏற்று உபசரிக்கிறார் முனிவர். ஐவரில் நடுநாயகமாக அமைந்த வசுதேவருக்கு வஞ்சுள வல்லியின் மேலே ஒரு கண். உணவு அருந்தி விட்டுக் கையலம்பக் கிளம்பியபோது, முனிவர் தம் பெண்ணை தண்ணீர் கொடுக்கச் சொல்கிறார். தண்ணீர் கொண்டு வந்த தையலின் கையை வசுதேவன் பற்றுகிறான். உடனே வஞ்சுளவல்லி 'அப்பா! இவர் செய்வதைப் பாரும்' என்கிறாள். ஓடி வந்த மேதாவி முனிவர், தம் மகள் கைப்பற்றி நிற்கம் வசுதேவனைக் காண்கிறார். அவனது அக்கிரமத்தைக் கண்டு கோபங் கொள்கிறார். சாபம் கொடுக்கவே முனைகிறார்.

வசுதேவனோ இந்த இக்கட்டான நிலையை உணர்ந்து, சங்குசக்கரம் ஏந்திய தன் திருக்கோலத்தை உடனே காட்டுகிறான். வந்திருப்பவன் திருமகள் கொழுநனாம் நாராயணனே என்று அறிந்ததும் மேதாவி முனிவர் வாழ்த்துகிறார்; தம் மகளாம் வஞ்சுளவல்லியை வசுதேவன் வடிவில் வந்த நம்பிக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார். அந்தத் திருமணக் கோலத்திலேயே இந்த நறையூரிலே நம்பி நின்றருளுகிறான். மேதாவி முனிவர் கெட்டிக்காரர். திருமணம் முடியும் முன்பே, நறையூர் நம்பியிடம் சில நிபந்தனைகள் போடுகிறார். ஒன்று தமக்குப் பிறவாமையாகிய