பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

65

சேவைக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகம். இவர் சிறந்த வரப்பிரசாதி. நறையூர் நம்பியிடம் கேட்டுப் பெறாத பிரார்த்தனைகளைக்கூட இவர் நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் உடையவர்.

அவருக்கு உவப்பான பலகாரம் அமுதகலசம் என்னும் மோதகம் தான். இந்த அமுதகலசம் என்றைக்கும். கிடைக்கும். கிடைக்காவிட்டாலும், காத்திருந்து பண்ணச் சொல்லி, பக்ஷிராஜனுக்கு நிவேதனம் பண்ணிவிட்டு, ருசிபார்த்துவிட்டே கிளம்புங்கள். எக்காரணத்தையிட்டும் அமுத கலசம் அருந்த மறந்து விடாதீர்கள்.

இன்னும் இத்தலத்திலே, நரசிம்மன் சந்நிதி, ஆஞ்ச நேயர் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி எல்லாம் பார்க்க வேண்டியவை. மேலும் எண்ணற்ற செப்பு வடிவங்கள் பெரிய அளவிலும் மிகச் சிறிய அளவிலும் ஏராளமாக இருக்கின்றன. இருப்பவைகளில் கலை அழகு நிரம்பியது யோக நரசிம்மரது வடிவம். சிறியவைகளை எல்லாம், நல்ல கண்ணாடிப் பெட்டியில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கலை அன்பர்கள் விரும்பினால் எடுத்துக் காட்டுவார்கள். இந்த நறையூர் நம்பியிடம் ஆறாத காதல் உடையவர் திருமங்கை மன்னன் என்பதை அவர் பாடிய நூற்றுப் பத்துப் பாசுரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தலத்து ஸ்ரீனிவாசனே அவருக்கு முத்திராதாரணம் செய்து