பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வேங்கடம் முதல் குமரி வரை

வைத்திருக்கிறார். இத்தலத்தைப்பற்றி, இங்குள்ள நம்பியைப்பற்றி அவர் பாடிய பாடல்கள் எல்லாம் எத்தனை தரம் படித்தாலும் தெவிட்டாதவை.

குலையார்ந்த பழுக்காயும்,
பசுங்காயும் பாளைமுத்தும்
தலையார்த்த இளங்கமுகின்
தடஞ்சோலைத் திருநறையூர்,
மலையார்ந்த கோலம் சேர்
மணிமாடம் மிகமன்னி
நிலையார் நின்றான். தன்
நீள்கழலே அடை நெஞ்சே

என்று நம்பியைப் பாடுவார். பின்னர்,

அம்பரமும், பெருநிலனும், திசைகள் எட்டும்,
அலைகடலும், குலவரையும், உண்டகண்டான்
கொம்பு அமரும் வட்மரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர்?
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசமுண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்தகோயில் - * . - :திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

என்று நம்மை எல்லாம் கூவி அழைத்து அந்த நம்பியிடம் ஈடுபடுத்துவார். இந்தப் பாசுரங்கள் எல்லாம் அரங்கத்தில் துயிலும் அரவணையான். காதிலும் விழுந்திருக்கிறது. திருமங்கை மன்னன் நறையூர் நம்பிக்கு ஒரு பெரிய மடலும் அரங்கநாதனுக்கு ஒரு பெரிய மதிலும் கட்ட முனைந்தபோது அந்த அரவணையான், மங்கை மன்னனை அழைத்து “மதிலை அங்கே கட்டு, மடலை இங்கே பாடு” என்று வேண்டியிருக்கிறான். அத்தனை விருப்பம் அந்த அரங்கநாதனுக்கு மங்கை மன்னன் பாடல் பெற.