பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேங்கடம் முதல் குமரி வரை

இதன் உண்மை அறிய விரும்புகிறான் அழகிய மணவாள நாயக்கன். விஷயம் தெரிந்துவிடுகிறது மந்திரி நரச பூபாலனுக்கு. மன்னன் வரப்போகிறான் என்ற உடனே இரவோடு இரவாய் ஒரு ராஜகோபாலன் தம்பதிகளை உருவாக்கி அவர்களுக்கு ஒரு சிறு கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்து தயாராய் வைத்திருக்கிறான்; மன்னன் வந்ததும் அந்தக்கோயிலைக் காட்டி மன்னனின் இஷ்ட தெய்வமான ராஜகோபாலன் கைங்கரியமே அங்கும் நடக்கிறது என்று காட்டியிருக்கிறான். மன்னனும் மகிழ்ந்து அந்தக் கோயில் கட்டும் செலவு முழுவதையுமே கொடுத்துத் திருப்பணியைப் பூர்த்தி செய்திருக்கிறான்.

இப்படித்தான் ராஜகோபாலனை முன் நிறுத்தித் திருச்சேறை சாரநாதன் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறான். பள்ளி கொண்டானில் இடிக்க வந்தவர்களைத் தடுத்திருக்கிறான் கஸ்தூரி ரங்கநாதன். இங்கோ பணியைத் தடுக்க வந்த மன்னனை உற்சாகமாகப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறான் ராஜகோபாலன், சாரநாதன் இவர்களையே காணச் செல்கிறோம் நாம் இன்று.

திருச்சேறை கும்பகோணத்துக்குத் தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. காரிலோ, பஸ்ஸிலோ, இல்லை வண்டியிலோ வசதியாகச் செல்லலாம். கோயிலுக்கு முன்னாலே ஒரு பெரிய தெப்பக் குளம், அதையே சார புஷ்கரணி