பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

79

இதில் இருந்தது ஒரு கஷ்டம், நடன நாடகத்தை நடித்த நடிகருக்கு எவ்வளவு கற்பனை வேண்டியிருந்ததோ அத்தனை கற்பனையுடையவர்களாகப் பார்ப்பவர்களும் அமைய வேண்டியிருந்தது. நடன நாடகத்தைக் கண்டவர்களும் கற்பனை பண்ணியே கதையைத் தெரிந்துகொள்ள, உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற் கடவுளாம் திருமாலாக எல்லாம் ஒரே நடிகர் மாறி மாறி நடித்ததைக் கண்டு மகிழ்ந்ததோடு வியப்பிலும் ஆழ்ந்து விட்டேன். அத்தனை கலை அழகு இருந்தது, அந்த நடன நாடக நிகழ்ச்சியில்.

இத்தனை கலை அழகையும் பின்னர் ஒரு சிற்ப வடிவில் கண்டபோது அப்படியே அதிசயித்து நின்றேன். அந்தச் சிற்ப வடிவம் அமைந்திருப்பதே ஒரு தனி அழகு. ஒரு சிற்பிக்கு நான்கு அடி நீளம், இரண்டு அடி அகலம் உள்ள ஒரு கல் கிடைக்கிறது.

வைகுண்டவாசன்

கல்லின் கனம் எல்லாம் ஒன்றரை அடிதான். இந்தக் கல்லைப் பார்ப்பதற்கு முன் சிற்பி கஜேந்திர மோக்ஷக் கதையைக் தன் மனக்கண்ணில் கண்டிருக்கிறான். ஆம்! 'உள்ளக் கிழியில் உரு எழுதி' வைத்திருக்கிறான். கிடைத்த கல்லில் உருவாக்கிக்காட்ட முனைந்திருக்கிறான். இருப்பதோ ஒரு சிறிய கல், அதில் உருவத்தால் பெரிய யானை, அந்த