பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

103

விலங்குகிறவர் ஆயிற்றே, அவர் பிறந்து வளர்ந்த பதி திருப்பூவணத்துக்குத் தென் கிழக்கே முப்பது மைல் தூரத்தில் இருக்கிறது.

திருப்பூவணத்திலிருந்து மானாமதுரை வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிப் பார்த்திபனூர் வழியாய், பரமக்குடி செல்லவேண்டும். பரமக்குடிக்கு நேர் வடக்கே ஐந்து ஆறு மைல் தொலைவில் இளையான் குடியிருக்கிறது. காரிலேயே செல்லலாம் ஊர்வரை. ஊர் சின்னஞ் சிறிய ஊர். இங்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது.

பூவணத்துப் பொன்னனையான்

அத்தலத்தில் உள்ள மஞ்சப்புத்தூர் செட்டிமார்கள் என்னும் ஆயிர வைசியர் இளையான்குடி மாறரைத் தங்கள் இனத்தவர் என்று உறவு கொண்டாடுகிறார்கள். இளையான் குடிமாறர், அவர் மனைவி ஆகிய இருவரது செப்புப் படிமங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள். இளையான்குடி மாறர் சரித்திரம் தெரிந்தது தானே. வருகின்ற சிவனடியாரையெல்லாம் அழைத்து விருந்தருந்த வைக்கும் இயல்புடையவர், அவர் வறுமையால் வாடுகிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் இரவில் அகாலத்தில் இறைவனே