பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வேங்கடம் முதல் குமரி வரை

வாதவூரர் பிறந்ததினாலே பெருமையும் பிரசித்தியும் பெற்ற தலம்தான் திருவாதவூர். அந்தத் திருவாதவூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவாதவூர் மதுரைக்கு வட கிழக்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். மதுரையிலிருந்து ஒத்தக்கடை வரை நல்ல சிமிண்ட் ரோடு இருக்கிறது. அதன் பிறகு சாதாரணக் கப்பி ரோடு உண்டு கார் இருந்தால் காரிலேயே செல்லலாம், இல்லாவிட்டால் பஸ்ஸிலும் செல்லலாம். ஊருக்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்பதும் ஒரு பெரிய குளம். அதனை ஏரி, கண்மாய் என்றெல்லாம் கூறுவர் மக்கள், அதுவே! புராணப் பிரசித்தி உடைய விஷ்ணு தீர்த்தம். வேதங்களை வைத்திருந்த திருமால் அவற்றை இழந்திருக்கிறார் ஒரு சமயம். அவற்றை மீண்டும் பெற இத்தலத்துக்கு வந்து இங்கு கோயில் கொண்டிருக்கும் வேதநாயகனை வழிபட்டிருக்கிறார். அவர் வழிபட்டது நீர் உருவில் நின்று. அதனாலேதான் இந்தத் தீர்த்தம் விஷ்னு தீர்த்தம் என்கிறார்கள்.

இந்தத் தீர்த்தக் கரையில் நின்று பார்த்தால் குளத்தினுள்ளே இரண்டு கற்கம்புகங்கள் தெரியும். அவகளின் மீது ஒரு கல் விட்டமும் அதன் மேல் ஒரு பிம்பமும் இருக்கும். இதனையே, புருஷா மிருகம் என்பர். உடல் எல்லாம் மிருகத்தின் உடலாகவும் முகம் மாத்திரம் முனிவரது முகம் போலவும் இருக்கும். புருஷா மிருகத்தைப் பற்றிப் பாரதத்தில் விரிவான விளக்கம் இருக்கிறது. பாண்டவர் தலைவனான தருமர் ராஜசூய யாகம் செய்ய முனைந்தபோது, யாக பூமியை தேர்ந்தெடுத்து அதைச் சுத்தமாக்கப் புருஷா மிருகத்தையே வேண்டியிருக்கிறார். அப்படியே புருஷா மிருகம் வேள்வி நடக்க இருக்கும் இடத்துக்கு வந்து அதனைத் தூய தாக்கியிருக்கிறது. இதோடு மாத்திரம் இதன் வரலாறு முடிந்து விடவில்லை. இது விஷ்ணு தீர்த்தத்தின் மத்தியில் இருந்து தீர்த்தத்தையே புளிதமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டாரத்தில் மழை இல்லாமலிருந்தால் நூறு தேங்காய்களையம், வேறு பொருள்களையும் கருக்கி இந்தச் சிலையின் மேல் பூசுவார்களாம்.