பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

107

அப்படிப் பூசிய இரண்டு மூன்று நாட்களுக்குள் நல்ல மழை பெய்கிறதாம். இப்படி ஓர் அனுபவம் இந்தப் புருஷா மிருக வழிபாட்டிலே. ஆகவே நாம் விஷ்னு தீர்த்தம், அங்குள்ள புருஷா மிருகம் இவைகளை வணங்கிய பின்னரே கோயிலில் நுழைய வேணும். கோயில் வாயிலில் ஒரு குளம், அதனை அக்கினி தீர்த்தம் என்பர்.

கோயில் வாயிலை ஐந்து மாடங்கள் கொண்ட ராஜகோபுரம் அணி செய்கிறது. கோயில் வாயிலைக் கடந்து உட்சென்றால் வெளிப் பிராகாரத்துக்கு வருவோம். அங்கு தல விருட்சமான மகிழ மரம் விரிந்து பரந்திருக்கிறது. அங்கேயே பைரவ தீர்த்தமும் இருக்கிறது. இந்தப் பிராகாரத்தின் வட பக்கத்திலே ஒரு நூற்றுக் கால் மண்டபம் இருந்திருக்க வேணும். அது இடிந்து சிதைந்து கிடக்கிறது என்றாலும் இன்னும் இருக்கும் கொடுங்கைள் அழகு வாய்ந்தவையாக இருக்கின்றன. இந்த மண்டடத்தை மாணிக்கவாசகரே கட்டினார் என்பது கர்ண பரம்பரை. இந்த மண்டபத்தில்தான் நடராஜர் மணிவாசகருக்குத் தம் பாதச் சிலம்பொலி கேட்க நடனம் ஆடியிருக்கிறார். அதை மாணிக்க வாசகரே,

வாதவூரில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

என்றும் பாடி மகிழ்ந்திருக்கிறாரே. இந்தப் பிராகாரத்தையும் சுடந்தே அடுத்த பிராகாரத்துக்கு வரவேணும். பிரதான கோயில் நேரேயே இருக்கும். அங்கு சென்று வாதபுரி ஈசுவரராம் வேதநாயகரைத் தொழுது வணங்கலாம். வாயு பூஜித்த தலம் ஆதலால் வாதபுரி ஈசுவரர் என்று பெயர் பெற்றிருக்கிறார். வேதங்களையெல்லாம் காத்தருளிய காரணத்தால் வேதநாயகர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். அம்மையின் பெயரும் வேதநாயகி., ஆரணவல்வி என்பதுதானே. வேதநாயகர் கோயில் உள்ளேயே ஒரு கிணறு, கபிலதீர்த்தம் என்ற பெயரோடு. சகரர்களைத் தம் பார்வையால் எரித்த கபில் முனிவர் இங்கே வந்து வேதநாயகனைப் பூஜித்து இத் தீர்த்தம் அமைத்தார் என்பது புராண வரலாறு. இந்தக்