பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வேங்கடம் முதல் குமரி வரை

திருவாதவூர்

கோயிலின் வடபக்கத்திலேயே ஒரு சிறு சந்நிதி, அங்கு சிலா விக்கிரகமாக நடராஜரும் சிவகாமியும் இருக்கின்றனர். நல்ல வடிவங்கள். நூற்றுக்கால் மண்டபம் நல்ல நிலையில் இருந்தபோது அங்கிருந்தவர்கள் போலும், பின்னர் மூலக்கோயிலிலேயே வந்து இடம் பிடித்திருக்கின்றனர். இந்தச் சந்நிதிக்கு நேரேயுள்ள தெற்கு லாயிலைத்தான் ஆறுகால் பீடம் என்கிறார்கள். நல்ல வேலைப்பாடமைந்த ஆறு தூண்கள் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன, அந்த வாயில் வழியாக வெளியே வந்து மேற்குப் பிராகாரத்துக்குப் போனால் அங்கு தான் மணிவாசகருக்கு ஒரு சந்நிதி அமைத்திருக்கிறார்கள். அங்கு ஏடேந்திய! கையராய்ச் சிலை வடிவில் மாணிக்க வாசகர் இருக்கிறார். அவரது உத்சவ விக்காகங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று பழைய வடிவம். மற்றொன்று சமீபகாலத்தில் செய்யப்பட்டது. பழைய வடிவிலே முழங்காலுக்கு மேலே துண்டு அணிந்த நிலையில் இருப்பவரை, இப்போது கோவணத்துடன் நிற்பதாக அமைத்திருக்கிறார்கள். மாணிக்கவாசகாது துறவைப் பூரணமாகக் காட்டக் கோவணத்துடன்தான் நிற்க வேண்டுமென்று