பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வேங்கடம் முதல் குமரி வரை

காளையார் கோயிலில் பார்த்திருக்கிறோமே. அங்கேயே வடபுறம் க்ஷீராப்தி நாதர் சந்நிதி வேறே. அடுத்த வாயிலையும் கடந்து சென்றால் கருட மண்டபம் வந்து சேருவோம். அங்கு மூன்று நான்கு நல்ல சிலைவடிவங்கள் தூண்களில் இருக்கின்றன. சீதாப்பிராட்டியை அணைத்த வண்ணம் நிற்கும் ராமன் ஒரு தூணில், அதனை அடுத்து லக்ஷ்மணான் ஒரு தூணில், இவர்கள் தவிர மன்மதன் ரதி முதலியவர்கள் வடிவங்கள், இவர்களுக்கிடையில் ஒரு சிறு கோயிலில் பெரிய திருவடியான கருடாழ்வார் நிற்கிறார். இனி மகாமண்டபத்தைக் கடந்து அர்த்தமண்டபத்துக்குச் செல்லலாம். அங்கிருந்து பார்த்தால் காளமேகப் பெருமாள் என்னும் மூலவர், தேவியர் இருவரோடும் நின்றகோலத்தில் சேவை சாதிப்பார். கம்பீரமான வடிவம். இந்தக் காளமேசுப் பெருமானையே கவி காளமேகம்,

பொன்னனைய அரக்கன் ஐந்நூற்றுவரைக்
காவை, பொரு சிலையைக்
கனைகடலைப் பொன்னன் ஈன்ற
நன்மகற்காப் கரர்களில்
ஐவருக்காய், காதல் நப்பின்னைக்காய்
நடவைக்காக
மன்னுகிரால் வடிக்கலையால்
வளையால், புள்ளால் வயங்குதோன்
வலியால் வானரங்களாலும்
முன்னுடல் கீறிச் சிரங்கொண்டு
அம்பில் வீழ்த்தி முதலொடும் கொண்டு
இருத்தசைத்த மோகூரானே

என்று அவன் பிரதாபங்களையெல்லாம் விரிவாகச் சாங்கோபாங்கமாகவே பாடியிருக்கிறார். இக்கோயிலிலேயே 'இடங்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்' என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்தபடி புஜங்க சயனராய்ப் பள்ளி கொண்டிருக்கும் கோலமும் இருக்கிறது. இத்தனையைக் கண்டாலும்