பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

ஊருக்கு நடுவே கோயில், கோயிலைச் சுற்றிச் சுற்றி வீதிகள். அந்த வீதிகளிலெல்லாம் அங்காடிகள் என்றெல்லாம் அமைந்திருப்பது அழகாய் இல்லையா? அப்படி நகர நிர்மாணத்துக்கே சிறப்பான எடுத்துக்காட்டாய் இருப்பது பழம் பெருமையுடைய மதுரை. அதனையே ஆலவாய், நான்மாடக்கூடல் என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். அந்த ஆலவாயிலே இறைவன் தனது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறான். பாண்டிய மன்னர்கள் அரசு செய்த இடம். இன்னும் எவ்வளவோ பெருமைகளை உடையது மதுரை, அந்த மதுரைக்கே செல்கிறோம்.

மதுரை செல்வதற்கு வழி நான் சொல்லி அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மதுரை நகருக்கு நடுநாயகமாய்க் கோயில், அதைச் சுற்றி ஐந்து வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒவ்வொரு உற்சவத்துக்கு ஏற்பட்டது. ஆடி மாதம் முளைக்கொட்டு விழா. அது நடக்கிற வீதி ஆடி வீதி. இது கோயில் மதிலுக்குள்ளேயே இருக்கிறது. அடுத்த சுற்று சித்திரை வீதி, மாசியில் நடக்கும் மக விழா இப்போது இவ்வீதியில் நடக்கிறது. அடுத்த சுற்று ஆவணி மூல வீதி. பெயரே தெரிவிக்கிறது. ஆவணி மூலப் பெருவிழா இதனில் நடக்கும் என்று. இதனையும் அடுத்தது மாசி வீதி.

சித்திரையில் நடக்கும் பெருந் திரு விழாவான, பிரம்மோத்சவம் இந்த வீதியில்தான் நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் வெளியேதான் வெளி வீதி. பஸ் போக்குவரத்துக்கெல்லாம் ஏற்றதாக அகன்ற பெரிய வீதி இது. பஸ்ஸில் சென்றாலும், ரயிலில் சென்றாலும் ஒவ்வொன்றாக இவ்வீதிகளைக் கடந்தே கோயிலுக்கு வரவேணும். ஊருக்கு வெளியிலேயே கோயிலின் நீண்டுயர்ந்த கோபுரங்கள் எல்லாம் தெரியும். சித்திரை வீதி வந்ததும் கோயில் வாயில்களும் தெரியும் நான்கு பக்கத்திலும் வாயில்கள் திறந்தே இருக்கும். இருந்தாலும் நாம் கோயிலுக்குள் செல்ல வேண்டியது கீழ வீதியில் உள்ள அம்மன் கோயில் வாயில் வழியாகத்தான். மற்றக்