பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

141

இருக்கிறது. அங்குதான் சிக்கந்தர் பாட்சா என்ற பக்கிரி அடக்கமாகியிருக்கிறார். இவர் பெயரையும் இணைத்தே ஸ்கந்தர் மலையைச் சிக்கந்தர் மலையாக்கியிருக்கிறார்கள் முஸ்லீம் நண்பர்கள்.

சமாதிக்கு முன்னால் உள்ள மண்டபம் நல்ல தமிழ் நாட்டுப் பாணியிலே இருக்கிறது. மண்டபத்தின் மேலேயுள்ள கூர் உருளை ஸ்தூபிகள் மட்டும் இஸ்லாமியர் கட்டிடக் கலையை ஒத்திருக்கின்றன. மலையின் தென்பகுதியில் ஒரு பாறை, அந்தப் பாறையில் இரண்டு திகம்பர சமண உருவங்கள் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றன. கூன் பாண்டியன் சமணனாக இருந்த காலத்தே இந்த வட்டாரத்திலெல்லாம் சமணர்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்கள் செதுக்கி வைத்த சிலைகளாகவே இவை இருக்க வேணும், தென்பாகத்தில், ஒரு கோயில் காசி விசுவநாதர் ஆலயம் என்று. அங்கு இருக்கிறது. விசவநாதர், விசாலாக்ஷி, கணேசர், சுப்பிரமணியர், பைரவர் முதலியோரது சிலைகள் இருக்கின்றன. பிரம்ம தேவர்கூட பஞ்சலிங்கத்துக்குப் பக்கத்தில் பூசை செய்து கொண்டி ருக்கிறார். மலையடிவாரத்தில் தென் புறத்திலே ஒரு குடை வரை இருக்கிறது. அதை உமையாண்டவர் கோயில் என்கிறார்கள். பாறையின் பின் சுவரில் நடராஜரது தாண்டவம் செதுக்கப்பட்டிருக்கிறது. மிருதங்கம் வாசித்துக்கொண்டு விஷ்ணு நிற்கிறார். வள்ளி தேவசேனை சகிதமாக