பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

145

இல்னல, ஆதலால் இடைநிலைக் கோபுரத்தை அடுத்த துவஜ ஸ்தம்பத்தின் வழியாகவே கோயில் உட்பிராகாரத்தக்குச் செல்லலாம். இந்தத் துவஜ ஸ்தம்ப மண்டபத்திலேதான் பல சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். உள் பிரகாரம் சென்றதும் நம்முன் இருப்பது மாதவிப் பந்தல், அந்தப் பிராகாரத்தைச் சுற்றிலும் அங்கு நூற்றெட்டுத் திருப்பதிகளில் உள்ள பெருமாள் நமக்குக் காட்சி கொடுப்பார். ஆம்! சுவரில் உள்ள சித்திர வடிவில்தான், 'இரண்டு வருஷங்களுக்கு முன் அந்தச் சித்திரங்களைப் புதுப்பித்து எழுதத் திட்டமிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. பூர்த்தியாகி விட்டதோ என்னவோ?

மாதவிப் பந்தல், மணி மண்டபம், ஆண்டாள் சுக்கிரவாரக் குறடு எல்லாம் கடந்துதான் அர்த்த மண்டடம் வரவேண்டும். அதற்கு அடுத்ததே கருவறை. அந்தக் கருவறையினுள்ளேதான் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய திருவடி மூவரும் சேவை சாதிக்கிறார்கள். நடுவில் ரங்கமன்னார். அவரது வலப்பக்கத்தில் ஆண்டாள். இடப்பக்கத்தில் பெரிய திருவடியாம் கருடாழ்வார் எழுந்தருளியிருக்கிறார்கள். ரங்கநாதர் திருமணக் கோலத்தோடு கூடிய ராஜ கோலத்தில் ராஜகோபாலனாகக் கையில் செங்கோல் ஏந்தி நிற்கிறார். ஆண்டாளோ சர்வாலங்கார பூஷிதையாய் அவர் பக்கலில் நிற்கிறாள். மற்றக் கோயில்களில் எல்லாம் பெருமாளுக்கு எதிரே நின்று சேவை சாதிக்கிற கருடாழ்வார் இங்கு மட்டும் ரங்கநாதர் பக்கத்திலேயே ஏகாங்கியாய் எழுந்தருளியிருப்பானேன் என்று கேட்கத் தோன்றும் நமக்கு. ஆண்டாளை மணம் புரிய வந்த ரங்கநாதரை அவசரம் அவசரமாகக் காற்றினும் கடுகிக் கொண்டு வந்து சேர்த்தவர் அல்லவா அவர்! அதற்காகவே இந்த நிலை வாய்த்திருக்கிறது அவருக்கும். மூல விக்கிரகங்களுக்கு முன்னாலே தங்க ஸ்தாபன கோபால மஞ்சத்தில் உற்சவ மூர்த்திகளாகவும் மூவரும் எழுந்தருளியிருக்கிறார்கள், இந்த மூர்த்திகளைத் தரிசிக்கும்போதே, ஆண்டாள் பிரபாவத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் நாம்.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் திருத்துழாய் கைங்கரியம் செய்து வந்திருக்கிறார். ஒரு நாள் அவர்

வே.ம.கு.வ 10