பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வேங்கடம் முதல் குமரி வரை

நாலாயிரப் பிரபந்தத்தில் முதலிடம் பெறுவன. ஆண்டாள் கோயில் விமானம் தங்கத் தகடு போர்த்தப் பெற்றது. இதில் ஆண்டாள் திருப்பாவைப் பாடல்களை விளக்கவல்ல திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டாளைத் தரிசித்து விட்டுத் திரும்பும்போது துவஜ ஸ்தம்ப மண்டபத்திலும், அதை அடுத்த மண்டபத்திலும் உள்ள தூண்களில் ரதி மன்மதன், ராமன் லக்ஷமணன், சரஸ்வதி முதலியோரது சிலா வடிவங்களைக் காணலாம், நல்ல நாயக்கர் காலத்து சிற்ப வடிவங்கள்.

ஆண்டாள் கோயிலை விட்டு வெளியே வந்து வடகிழக்கு நோக்கி நடந்தே வடபத்திர சயனர் கோயிலுக்கு வரவேணும். அங்கு போகும் வழியில் ஆண்டாள் பிறந்த நந்தவனம் இருக்கிறது. அங்குள்ள கோயிலில் ஆண்டாளது திருவுருவம் சிலைவடிவில் தளியே இருக்கிறது. இங்குள்ள ஆண்டானையும் தரிசித்து விட்டு வடக்கே நோக்கி நடந்தால் வடபத்திர சயனர் கோயில் வருவோம். கோயில் வாயிலைப் பெரியதொரு கோபுரம் அணி செய்கிறது. இந்தக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் தெற்கே பார்க்கப் பெரியாழ்வார் சந்நிதி இருக்கிறது. பெரியாழ்வார் அவதரித்த இடம் ஆதலால் சாத்துமுறை சிறப்பாக நடக்கிறது.

இந்தச் சந்நிதியை அடுத்து மேற்கேயுள்ளது பெரிய பெருமாள் சந்நிதி, இக்கோயிலில் இரண்டு தட்டுகள். கீழே நரசிங்கப் பெருமாள் சந்நிதி, இச்சந்நிதிக்குக் கிழக்கே வடபுறம் பன்னிரு ஆழ்வார்களும் தசாவதார மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கிறார்கள். தென்பக்கமாக மேல் மாடிக்குப் போகப் படிகள் இருக்கின்றன. அவைகளில் ஏறிச்சென்றால் முதலில் நாம் சேர்வது கோபால விலாசம். அதனை அடுத்து விமல ஆகிருதி விமானத்தின் கீழே உள்ள கருவறையில் வட ஆல விருட்சத்துக்கு அடியில், ஆதிசேஷன்மீது பூதேவியும் சீதேவியும் அடிவருட வடபத்திரசயனர் சயனித்திருக்கிறார். அருணன், பிருகு, மார்க்கண்டேயன் எல்லாம் அங்கே இருக்கிறார்கள், இங்குள்ள அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், கண்ணன் வீதியுளா வருவார், வில்லிப்புத்தூர்