பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வேங்கடம் முதல் குமரி வரை

நாடாக்கிக் கோவிலையும் கட்டியிருக்கிறான், காவல் பறையன் சொல்வதற்கு முன்பே உக்கிர பாண்டியனின் பட்டத்து யானையும் கொம்பினால் தரையைக் குத்தியிருக்கிறது. அந்த இடத்திலிருந்து மன் எடுத்து வந்தே திருவிழா எல்லாம் நடத்தியிருக்கிறான் பாண்டியன்,

யானை கொம்டால் குத்திக் காட்டிய இடமே பெருங்கோட்டூர் என்று வழங்குகிறது. காவல் பறையனுக்கும் ஊரின் தென் கோடியில் ஒரு சிறு கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் இருக்கும் தெருவே காப்பறையன் தெரு என்றும் இன்று வழங்குகிறது. காவல் பறையன், உக்கிர பாண்டியன் சிலைகள் எல்லாம் கோயிலில் இருக்கின்றன, சங்கரலிங்கர் கோயிலின் வடமேற்கு மூலையில் புற்றும் இருக்கிறது. புற்றைச் சுற்றிக் கட்டிப் பாதுகாத்து வருகின்றனர். இந்தத் தலத்துக்கு வருவோரது உடற்பிணியெல்லாம் இந்தப் புற்று மண்ணால் நீங்குகிறது. ஆதலால் கோயிலில் பிரசாதமாகவே இப்புற்று மண்னை வில்லைகளாக ஆக்கிக் கொடுக்கின்றனர்.

இக்கோயிலில் உள்ள சங்கர லிங்கரைவிடப் பிரபலமானவள் கோமதி அம்மையே. முன்னமேயே தெரிந்து கொண்டிருக்கும் தாயாகிய தத்துவத்தை. கோமதியம்மை வடிலில் இங்குக் கோயில் கொண்டிருக்கிறது அந்தத்தத்துவமே கிட்டத்தட்ட இரு நூறு வருஷங்களுக்கு முன்பு திருவாவடுதுறையில் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் வேலப்ப தேசிகர். அவர் சங்கரன் கோயிலுக்கு வந்து, கோமதியம்மையின் அருளைத் துணைக்கொண்டு, குட்டம், குன்மம் முதலிய் தீராத நோய்களையும் தீர்த்தருளியிருக்கிறார். அவர் கோமதியம்மையின் சந்நிதியில் ஒரு மந்திர சக்கரத்தைப் பதித்திருக்கிறார். அந்தச் சக்கரத்துக்கு கோமதியம்மை தந்தருளிய சக்தியினாலே அங்கு ஆடாத பேயும் ஆடுகிறது தீராத நோயும் தீர்கிறது. ஆதலால் கோமதி அம்மையின் - பிரபாவம் நாளும் வளர்ந்தோங்கி வருகிறது. கோமதியின் சந்நிதிக்கெதிரேதான் நாகசுனைத் தீர்த்தம் இருக்கிறது.

சங்கர லிங்கரும் கோமதியும்தான் ஆதியிலேயே தோன்றிய சந்நிதிகள், இடையில் தோன்றியவர்தான் சங்கர நாராயணர். உலகில்