பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வேங்கடம் முதல் குமரி வரை

கருமம் அழிப்ப அளிப்பு
கையில் வேல் நேமி
உருவம் கார் மேனி ஒன்று

என்று பாடிப் பரவியிருக்கிறார். இதனால் அரி, அரன் எல்லோரும் ஒன்றே, அயனும் அரியும் அரனார் திருவுருவில் அடங்கினவரே என்ற உண்மை நிலைபெற்றிருக்கிறது. ஆம், அம்பிகை கோமதி மாத்திரம் அல்ல. சங்கரனும் பதுமனுமே இச் சங்கர நாராயணர் காட்சியைக் கண்டு உண்மையை உனர்ந்த கொண்டிருக்கின்றனர்.

ஐய! நின் கூறே மாலும்
அயன் முதல் தேவும் என்னும்
மெய்யுணர்வே எஞ்ஞான்றும்
விளைவுற வேண்டும்

என்று நாமேல்லாரும் சேர்ந்து பாடவும் தெரிந்து கொண்டிருக்கிறாேம், இந்தச் சங்கர நாராயணரே, அத்தன் சங்கர லிங்கருக்கும் அம்மை கோமதிக்கும் இடையில் எழுந்தருளியிருக்கிறார். மூலவர் கம்பீரமான வடிவர். அதிலும் பகுதி பகுதியாகக் காப்பிட்டுக் காட்டும்போது இரண்டுருவும் ஒன்றாய் இனைந்து நிற்கிற கோலம் பேரழகு.

இந்தச் சங்கர நாராயணரைப் பற்றி ஒரு சுவையான வரலாறு. கி.பி. 17Ti-ல் திருமலை நாயக்கரது தானாதிபதியாக இந்த வட்டாரத்தில் இருந்தவர் பொன்னம்பலம் பிள்ளை. அப்போது நாயக்கரது தளவாயாக இருந்தவர் ஆறை அழகப்ப முதலியார். சங்கரன் கோயில் சங்கர நாராயணரைச் செண்பசுக் கண்ணு பட்டர் என்பவர் திருடிக் கொண்டு போய் உத்தரகோச மங்கையில் அடகு வைத்துவிட்டார். ராமநாதபுரம் சேதுபதி விஜயரகுநாதத் தேவர் அத்திருவுருவைக் கோயில் மூர்த்திகளுடன் வைத்துப் பூசை செய்ய உத்தரவிட்டிருந்தார். இத்தகவல் அறிந்து ஆறை அழகப்ப முதலியார் பொன்னம்பலம் பிள்ளையை அனுப்பித் திருவுருவை மீட்டு வரச்