பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

ஒரு நூல் இயற்றியிருக்கிறார். எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை. அன்னையின் அருள் சக்தியை உணர்ந்த திருநெல்வேலி அழகிய சொக்கநாதபிள்ளை பாடல்கள் பிரசித்தமானவை. அதில் ஒரு பாட்டு, அன்னைக்கே சவால் விடும் பாட்டு.

கேடாய் வரும் நமனைக்
கிட்ட வராதே தூரப்
போடா எனவோட்டி உன்
பொற் கமலத்தாள் நிழற்கீழ்
வாடா என அழைத்து
வாழ்வித்தால் அம்ம! உனைக்
கூடாதென்று ஆர் தடுப்பார்?
கோமதித்தாய் ஈசுவரியே!

என்பது பாட்டு, எவ்வளவு உறுதியான உள்ளத்தில் இருந்து பிறந்திருக்கிறது. யமனையே தூரப் போடா என்று ஓட்டி, தன்தாள் நிழலுக்கு வாடா என அன்னையால் அழைக்க முடியாதா என்ன? ஆம்! அப்படி அழைப்பாள் என்று நம்புகிறான் கவிஞன், நாமும் அப்படி நம்பிக் கொண்டே வீடு திரும்பலாம்.