பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வேங்கடம் முதல் குமரி வரை

என்ற பாடலையும் பாடிக் காட்டியிருக்கிறார். ஆம், மரங்களை விரும்புவதோடு நிற்காமல் அவைகளையே சிவலிங்க சொரூபமாக வழிபடவே தெரிந்தவர்கள் தமிழர். அப்படி வழிபாடு இயற்றுவதற்கு உரிய வகையில் இருப்பதுதான் குறும்பலா. அந்தக் குறும்பலா இருக்கும் தலம்தான் குற்றாலம். அந்தத் திருக்குற்றாலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்குற்றலாம் எங்கிருக்கிறது. என்று சாரல்கால சமயத்தில் நான் சொல்லித் தெரிய வேண்டியவர்கள் அல்ல நீங்கள், தென்காசிக்கு ஒரு டிக்கெட் வாங்கி அங்கு போய் இறங்கி மேற்கு நோக்கி மூன்று மைல் சென்றால் குற்றாலம் போய்ச் சேரலாம். இப்போதுதான் மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும், தூத்துக் குடியிலிருந்தும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் வேறு விடப்படுகின்றனவே. கோடை க்காலத்தில் உதகை, கோடைக் கானல் என்

குற்றாலம் அருவி

றெல்லாம் செல்லும் சுகவாசி களைவிட எண்ணி றந்தோர் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் குற்றாலம் நோக்கிச் செல்வார்கள்.