பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

வேங்கடம் முதல் குமரி வரை

அருலியாடும் அனுபவம் ஓர் அற்புத அனுபவும். அது சொல்லும் தரத்தன்று. ஆகவே அருவியாடி திளைத்து அதன்பின் கோயில் வாயில் வந்து கோயிலுள் நுழையலாம். அருவிக் கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரம்தான் கோயில் வாயில், கோயில் வாயிலை ஒரு சிறு கோபுரம் அணி செய்கிறது. கோயிலில் நுழைந்தால் விஸ்தாரமான மண்டபம் இருக்கிறது முதலில் இதனையே

கோயில்

திரிகூட மண்டபம் என்பர். இதனைக் கடந்தே நமஸ்கார மண்டபம், மணி மண்டபம் எல்லாம் செல்லவேணும். இதற்கு அடுத்த கருவறையில் தான் திருக்குற்றாலநாதர் லிங்க வடிவில் இருக்கிறார். இவர் ஆதியில் விஷ்ணுவாக இருந்தவர். பின்னர் அகத்தியரால் சிவலிங்கமாக மாற்றப்பட்டார் என்பது புராணக்கதை.

இறைவன் இட்ட கட்டளைப்படி வடநாடிருந்து அகத்தியர் தென்திசைக்கு வருகிறார். அப்போது இக்குற்றாலநாதர் கோயில்