பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

165

என்றும்

மலையார் சாரல் மகவுடன்
வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி
மாந்தும் குற்றாலம்

என்றும் குற்றாலத்தைப் பாடிப் பரவியவர்,

அரவின் அணையானும் நான்முகனும்
காண்பரிய அண்ணல் சென்னி
விரவிமதி அணிந்த விகிர்தருக்கு
இடம்போலும் விரிபூஞ் சாரல்
மரவம் இருக்கையும் மல்லிகையும்
சண்பகமும் மலர்ந்து மாந்தக்
குரவமுறுவல் செய்யும் குன்றிடம்
சூழ்தண் சாரல் குறும்பலாவே

என்று குறும்பலாவையும் பாடியிருக்கிறார். நாவுக்கரசர், 'குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளர்?' என்றே கேட்கிறார்.

மணிவாசகரோ,

உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
சுற்பனவும் இனிபமையும்
குற்றாலத்தமர்ந்து உறையும்
கூத்தா உன்குரை கழற்கே
கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே

என்று கசிந்து கசிந்து பாடியிருக்கிறார். கபிலரும் பட்டினத்தடிகளும் குற்றாலத்தானை நினைந்து பாடிய பாடல்களும் உண்டு.

இத்தலத்தில் நிறைய கல்வெட்டுகள் உண்டு. கி.பி. பத்தாம்