பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தங்கள் தங்கள் மடங்களுக்கே வரவழைத்துப் பாராட்டி, பட்டமும் நல்கி இந்தத் திருப்பணிக்குத் தங்கள் நல்லாசிகளை வழங்கியிருக்கிறார்கள். எத்தகைய பேறு அது திரைப்படத் தொழில் அதிபர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள், முதல் பதிப்பு வெளி வந்ததும் அதனை அந்த ஆண்டின் சிறந்த புத்தகமாகக் கொண்டு ஆயிரம் ரூபாய் பரிசளித்து கோலாகலமாகப் பாராட்டு விழாவும் நடத்தியிருக்கிறார். கோவை நன்னெறிக் கழகத்தாரும் தங்கள் பங்குக்கு இந்தத் தொகுதிகளில் ஒன்றின் வெளியீட்டு விழாவைக் கோவையில் கொண்டாடிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

"வேங்கடம் முதல் குமரி வரை" முதல் பதிப்பு 1960 ஆம் ஆண்டு, திருநெல்வேலி எஸ்.ஆர்.எஸ், புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் 3000 படிகள் வெளியிட்டார்கள். அவர்கள் ஆர்வம் வீண் போகவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள்ளகவே அத்தனை படிகளும் லிற்பனையாகி விட்டன. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1964 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பைக் கொனர்ந்தார்கள், அவையும் நாளாவட்டத்தில் விற்பனையாகி விட்டன. கைவசம் படிகள் இல்லாத காரணத்தால், டெல்லியிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும், பூனாவிலிருந்தும், தமிழ் நாட்டு ஊர்களிலிருந்தும் அன்பர்கள் புத்தகம் கேட்டு எழுதிய போது அனுப்பமுடியாத நிலையில் மிகுந்த மனச்சங்கடத்துக்கு உள்ளாக வேண்டியிருந்தது. சூழ்நிலைகள் சரிவர அமையாததால் உடனடியாக மறு பதிப்பைக் கொண்டு வர இயலாது போய் விட்டது. அருமைத் தந்தையார் அவர்களின் மறைவுக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது பதிப்பு வெளிவந்தது. இதனை வெளியிட சென்னை அபிராமி நிலையம் முன் வந்தது.

மூன்றாவது பதிப்பும் விற்பனை ஆகிவிட்டதால், அன்பர்கள் விரும்பிக் கேட்கும்போது தரமுடியாத சூழ்நிலை. அப்போதுதான் மறுபதிப்புக்கான அவசியத்தை உணர்ந்தேன். நான்காம் பதிப்பை வெளியிட கலைஞன் பதிப்பகம் ஆர்வத்துடன் முன் வந்திருக்கிறது.