பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

171

முகப்பு மண்டபம் இருக்கிறது. இம்மண்டபம் ஓர் அரிய கலைக் கூடம் அங்குள்ள எட்டுத் தூண்களிலும் எட்டுச் சிற்ப வடிவங்கள், அகோர வீரபத்திரன், மான் மதன், வேணுகோபாலன், காளி நால்வரும் தென் பக்கத்துத் தூண்களில், வீரபத்திரர், ரதி, மாதாண்டவர், ஊர்த்துவ தாண்டவர் நால்வரும் வடக்கு வரிசையில், இவை தவிர கோவிலைப் பார்க்க மேற்கு முகமாக உள்ள துண்களில் இரண்டு பெண் வடிவங்கள். ஒருத்தி பொட்டிட்டு கொண்டிருக்கும் நிலை. சிற்பக்கலை வல்லுநர்கள் பல மணி நேரம் நின்று பார்க்க வேண்டிய சிலா வடிவங்கள். இம்முகப்பு மண்டபத்தைகக் கடந்து, மகா மண்டபம், மணி மண்டடம் அர்த்த மண்டபம் எல்லாம் செல்ல வேண்டும். அதற்கடுத்த சுருவறையில் தான் காசி விசுவநாதர் இருக்கிறார். இவருக்கு எத்தனை எத்தனையோ பெயர்கள்.

விசுவனே விசுவநாதன்
விசுவேசன், உலகநாதன்,
பசுபதி, சிவன், மயோன்,
பராபரன், முக்கட் பெம்மான்
சிசுவரம் தருவோன், நம்பன்
சிவைமனாளன், ஏற்றோன்
அசுதையார் நீலகண்டன்
அநாதி தென்காசி நாதன்

என்பது தல புராணப் பாடல். இந்த விசுவநாதனைத் தரிசித்து வெளியே வந்துதான், தென்பக்கத்தில் உள்ள விசாலாக்ஷி சந்நிதிக்குச் செல்லவேண்டும். இரண்டு கோவில்களுக்கும் இடையே ஒரு சிறு கோயில், அதன் முகப்பு மண்டபத்திலும் சிற்ப வடிவங்கள், இவை சிறப்பு வாய்ந்தவை அல்ல.

இங்குள்ள மூலக்கோயில் இன்று நெல்சேராக இருக்கிறது. இது ஆதியில் பெருமாள் கோயிலாக இருந்திருக்கிறது. இங்குள்ள பெருமாளையே ஆற்றங்கரைப் பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பெரிய கோயில் கட்டியபின் விஜயநகர மன்னன் அச்சுதன் இப்பக்கம் வந்திருக்கிறான். அவன் தான் இப்பெருமாள் கோயிலை இடையிலே கட்டி வைத்தான் என்று வரலாறு கூறுகிறது.