பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

173

தோன்று மகள் அரி
கேசரி தேவனாத்துலங்கி
சான்று காண் பராக்கிரமன்
நன்று எடுத்தது இத்தலமே

என்று தல புராணம் கூறுகிறது. இந்தப் பராக்கிரம பாண்டியன் இறைவன் திருவடி நிழல் எய்திய போது இவனது சிவபக்தியை உணர்ந்த ஒரு கவிஞர்.

கோதற்ற பத்தி அறுபத்து
மூவர்தம் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ
செம்பொன் அம்பலத்தோ
வேதத்திலோ, சிவலோகத்திலோ
விசுவநாதன் இரு
பாதத்திலோ சென்று புக்கான்
பராக்கிரம பாண்டியனே

என்று பாடியிருக்கிறார். இதுவும் கோபுரத்துச் சுவரிலேயே பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இத்தனையும் தெரிந்து கொண்டு வெளியில் வரும் போது முப்பது வருஷங்களுக்கு மேலாகத் தமிழ்ப் பணிபுரிந்துவரும் திருவள்ளுவர் கழக மண்டபத்தையும் பார்க்கலாம். இதன்பின் அவகாசம் இருந்தால் இத்தலத்தில் மற்ற சுற்றுக் கோயில்களையும் மடங்களையும் போய்ப் பார்க்கலாம். ஊரின் பல பாகங்களிலே வரகுணநாதர் கோயில், குலசேகரநாதர் கோயில், விண்ணவரப் பெருமாள் கோயில், நவநீத கிருட்டிணன் கோயில், பொருந்தி நின்ற பெருமாள் கோயில்கள் எல்லாம் இருக்கின்றன. இத்தலத்தில் செண்பகப் பாண்டியனால் எட்டுத் திருமடங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. எல்லா இடத்தும் சிவாகமங்கள் ஓதி உணர்வதற்கு