பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

கரைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்டு வருகிறார். எம்பெருமானிடம் தீராத காதல் கொள்கிறார். அது காரணமாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடு நெருங்கி வாழ்கிறார். இது மந்திரி பிராதானிகளுக்குப் பிடிக்கவில்லை. ஸ்ரீவைஷ்ணவர்களிடம் இருந்து பிரிக்க ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள். பெருமான் திருஆபரணப் பெட்டியிலிருந்து ஒரு நவரத்தின ஹாரத்தை எடுத்து ஒளித்து வெத்து விட்டு அதனை வைஷ்ணவர்களே எடுத்திருக்க வேண்டுமென்று மன்னரிடம் புகார் செய்கிறார்கள். மன்னருக்கோ லைஷ்ணவர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை. அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்க, ஒரு மண் குடத்தில் விஷப் பாம்புகளைப் போட்டுக் கொண்டு வந்து வைத்து. 'அந்த ஹாரத்தை வைஷ்ணவர்கள்தாம் எடுத்திருக்கிறார்கள்' என்று சொல்கிறவுரை, குடத்தில் கைவிட்டுப் பிரமாணம் செய்யச் சொல்கிறார். மந்திரி பிரதானிகள் ஒருவரும் முன்வரவில்லை. உடனே மன்னராம் குலசேகரரே, 'பரன் அன்பர் அக்காரியம் செய்யார்' என்று சொல்லிக் கொண்டே பாண்டத்தில் கையை விட்டுச் சத்தியம் செய்கிறார். பாண்டத்தில் உள்ள பாம்பு ஒன்று அவர் கை வழியாக ஏறித் தலையில் வந்து அவருக்குக் குடை. பிடிக்கவும், மற்றொன்று வெளியே வந்து ஹாரத்தை மறைத்தவர்களைச் சீறி விரட்டவும் செய்கின்றது. மறைத்தவர் மன்னர் காலில் விழுந்து மன்னிப்புப் பெறுகிறார்கள். குலசேகரர் பரமபக்தராக, ஆழ்வாராக வாழ்கிறார். பரந்தாமன் மீது பல பாடல்களைப் பாடுகிறார். இந்தத் தகவலையெல்லாம்.

ஆரம் கெடப், 'பரன் அன்பர்
கொள்ளார்' என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில்
கையிட்டவன்-மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல்
கொல்லி காவலன், வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடி
வேந்தர் சிகாமணியே