பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வேங்கடம் முதல் குமரி வரை

விழாவைத் திருநெல்வேலி அன்பர்கள் அதிலும் பெண் மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? அதைச் சொல்கிறார் ஒரு கவிஞர்.

வேணு வனத்து இறைவர் புது
மணம் விரும்பி, விளையாட்டாய்
காணும் உமைப்பெயர் பொருந்தும்
காந்திமதிதனைக் கடிந்து காட்டுக்கு ஓட்டி
தானும் அவள் பின் சென்று நயம் படித்து
பலர் சிரிக்க நலிவே! உற்றால்
வாள்நுதலும் அவர்பின்னே வருவதுவும்
வியப்பாமோ? வசை ஒன்று இன்றி!

கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற தலைவியின் பின் சென்று, கெஞ்சிக் கூத்தாடி அவளைத் தம் வீட்டுக்குத் திரும்பவும் அழைத்து வருகிறார் நெல்லையப்பர் என்பது பாமரர் காணும் கதை. ஆம், இந்தக் கதையில் கூடப் பெண்மையின் வெற்றியே மேலோங்கி நிற்கிறது. இப்படித்தான் காந்திமதியாம் வடிவன்ளை முக்கியத்துவம் பெற்று விடுகிறாள். அவள் கருவறையில் கையில் செண்டேந்திக் கொண்டு நின்றால், செப்புச் சிலை வடிவில் ஞான முத்திரையோடு நிற்பாள். உயிர்களுக்கெல்லாம் அருள் புரியும் கோலம் அல்லவா இந்த வடிவுன்னையின் வடிவம்!

இந்த வடிவன்னையை மணந்தவரே நெல்லையப்பர் என்னும் வேணுவனநாதர். இவரது சந்நிதி அம்மையின் இடப் பக்கத்திலே. இவ்விரண்டு கோயில்களும் தனித்தனியே கட்டப்பட்டிருக்க வேணும், பின்னர்தான் இரண்டு கோயில்களையும் இணைத்து ஒரு மண்டபம், பொற்றாமரைக்கு மேல் பக்கம் கட்டியிருக்கிறார்கள். இதனையே சங்கிலி மண்டபம் என்கிறார்கள், இம்மண்டபத்தைக் கட்டியவன் ஒரு தொண்டைமான் என்று அம்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

இந்த மண்டபம், பிராகாரம் எல்லாம் கடந்தே நெல்லையப்பர் சந்நிதிக்கு வரவேணும். இவர் நெல்லையப்பர் என்றும் ஏன் பெயர்