பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

201

கோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு மண்டபம், மண்டபத்தைக் நடந்து கோயில் வாயிலுள் நுழைந்தால் முதல் முதல் நாம் காண்பது முக மண்டபம். அந்த மண்டபம் தெற்கே பார்த்திருக்கிறது. அதன் முகப்பில் ஆறு தூண்களில் ஆறு அழகிய சிற்ப வடிவங்கள், அதில் ஒன்றுதான் நாம் முன்னர் குறித்த சிற்ப வடிவம், வீரனின் தோள்களில் சோழ ராஜகுமாரி உட்கார்ந்திருக்கிற நேர்த்தியையும், அவள் வெயிலுக்காகத் தன் முந்தானையை விரித்துத் தலைக்குமேல் பிடித்திருக்கிற அழகும் சிறப்பாயிருப்பதைப் பார்ப்போம். வைத்த கண் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்கச் செய்யும் சிலா படிவம். மற்றையத் தூண்களிலோ பாசுபத அஸ்திரம் பெறத் தவக்கோலம் பூண்ட அர்ச்சுனன், அவனோடு தீராப் பகைமை பூண்ட அந்த அங்க தேசத்து மன்னன், புகழ் பெற்ற கொடையாளி கர்ணன். இன்னும் அரசிளங்குமரனைச் சுமந்து நிற்கும் குறப்பெண் ஒருத்தி, இன்னும் இரண்டு பெண்களின் சிலை வடிவங்கள், பெண்களின் வடிவெல்லாம் கண்டார் கண்ணையும் கருத்தையும் கவர்வன, பாசுபதம் பெறப் பல மாத காலம் ஊண் உறக்கம் இன்றிப் பசுபதியை நாக்கித் தவம் செய்தவன் அல்லவா அருச்சுனன். ஆதலால் தாடி, சடை எல்லாம் நீண்டு வளர்ந்திருக்கின்றன. அவனுக்கு முகத்திலே ஓர் அசாதாரணக்களை, பெருந் தவசிகளுக்கு இருக்க வேண்டிய சாந்தம், பொறுமை எல்லாம் கனிகின்றன. தவக்கோலமே என்றாலும் வில் தாங்கிய வீரன்தான் அவன். அவன் பாசுபதம் பெறுவதே தன் வில்லாற்றலையும் மல்லாற்றலையும் காட்டத்தானே! இத்தனை அழகோடு விளங்கும் அர்ச்சுனனுக்குப் பக்கத்திலேயே கர்ணன், அவன் நாகபாச மேந்திய கையனாய் நிற்கிறான். வீரனுக்கு உரிய காம்பீர்யம், வில் வித்தையில் சிறந்தவன் என்பதனால் ஏற்பட்ட மிடுக்கு, எல்லாவற்றையுமே பார்க்கிறோம் இந்தச் சிலையில்.

இச் சிலைகளைப் பார்த்தபின் மகா மண்டபத்தில் நுழையலாம். கோயிலுள் நுழையும்போதே கொஞ்சம் பயபக்தியுடன்தான் நுழைய வேண்டும். உள்ளே சென்றதும் நம்மை உறுத்து லிழித்து நோக்குபவன்தான் வீரபத்திரன், கனல் உமிழ் கண்களுடன் தென்