பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

217

கொங்கணையான் குறடு, கிளிக்குறடு எல்லாம். இவற்றையெல்லாம் கட்டந்தே கருட மண்டபம் வந்து சேரவேனும், இன்னும் நடந்தால் அர்த்த மண்டபம், அங்கு வந்து தான் கருவறையில் உள்ள ஆதிநாதரைத் தரிசிக்க வேணும். இவரும் இவர் பக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி இருவரும் சுதையினாலான வடிவங்களே. இந்த ஆதிநாதருக்கு முன்புதான், உத்சவர் பொலிந்து நின்று பிரான் என்ற பெயரோடு பொலிகிறார். இவரை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

இலிங்கத் திட்ட புராணத்திரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வந்து சொல்வீர்காணும்
மற்றும் நம் தெய்மாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரிவீசும்
திருக் குருகூர் அதனுள்
பொலித்து நின்ற பிரான் கண்டீர்
ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.

என்பது பாசுரம். பொலிந்த நின்ற பிரானைப் பாடியவர் ஆதிப் பிரானை மறந்து விடுவாரா? அவரையுமே பாடி மகிழ்ந்திருக்கிறார்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் -
மற்றும் பாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு
தேவர் உலகோடு உயிர்படைத்தாய்,
குன்றம் போல மணிமாட
நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க
மற்று எத்தெய்வம் நாடுதிரே?

என்பது பாட்டு. பொலிந்து நின்ற பிரான் பக்கத்திலேயே உத்சவர்களாகப் பூதேவி. சீதேவி, நீலாதேவி, மூவரும் நிற்கிறார்கள். இவர்களைத் தவிர இக்கோயிலில் தனிக்கோயில் நாச்சியார்களாக ஆதிநாயகியும், குருகூர் நாயகியும் வேறு இருக்கிறார்கள்.