பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

வேங்கடம் முதல் குமரி வரை

ஆதியில் கோயிலின் கருவறையே குளத்துக்குள்தான் இருந்திருக்கிறது. இன்றும் குளத்தில் நீர் நிறைந்திருந்தால் கோயில் கருவறையைச் சுற்றி ஒன்றிரண்டு அடித் தண்ணீர் நிற்கும். ஆம், கோயில், குளம், மரம் எல்லாம் பரமபத நாதனை நினைவுபடுத்திக் கொண்டே நிற்கும் அங்கு, கோயில் வாயிலுக்குச் சென்றால் முதலில் பந்தல் மண்டபம் என்ற இடத்துக்கு வந்து சேருவோம், அதை ஒட்டிய உயர்ந்த மண்டபங்களிலேதான் தங்க ரதம், தங்கச் சப்பரம் எல்லாம் இருக்கின்றன.

வானவாமலை கோயில்-குளம்

செல்வாக்கு உள்ளவர்கள் என்றால், நிர்வாகிகள் கதவுகளைத் திறந்து தங்க ரதத்தை எல்லாம் காட்டுவார்கள். ஆனால் பங்குனி உத்திரத்துக்கு முந்திய நாள் அங்கு சென்றால் ஒருவரது 'தயவும் இல்லாமலேயே தங்க ரதம் தெரு வீதியில் உலா வருவதைக் கானலாம். இந்தப் பந்தல் மண்டபத்தின் வடபகுதியிலேதான் வானபோமலை மடம் இருக்கிறது. அம்மடத்தில் உள்ள ஜீயர் பிரசித்தி