பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

237

கட்டியிருக்க வேணும். வரமங்கை நாச்சியார் கோயில் கொண்டிருப்பதன் காரணமாக வரமங்கல நாயகர் என்ற பெயர் பெற்றிருக்கிறது. அந்தப் பெயரையே நம்மாழ்வாரும் தம் பாசுரங்களில் கையாண்டிருக்கிறார். பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் நாயக்க மன்னர்களால் விரிவடைந்திருக்கிறது. இன்னும் சுற்றுத் தூண்கள் தாங்கும் நீண்ட பிராகாரங்கள் இக்கோயிலின் பெரும் பகுதி நாயக்கர் திருப்பணியே என்பதை நினைவுறுத்தும். புஷ்பாஞ்சலி சன்னியாசி என்பவர் இங்கிருந்த பல திருப்பணிகளைச் செய்தார் என்பதும் வரலாறு. அப்படித் திருப்பணி செய்த அன்பர்களுக்கு நாமும் அஞ்சலி செய்து விட்டு மேலே நடக்கலாம்.