பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29. திருக்குறுங்குடி அழகிய நம்பி

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமானாவதாரம் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினன் என்பது நமக்குத் தெரியும். இந்த வாமனனே பின்னர் திருவிக்கிரமனாக வளர்ந்தான் என்பதையும் அறிவோம், இந்த வாமனாவதாரத்தைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழகாகப் பாடுகிறான். நமக்குத் தெரிந்த கதைதானே. மண் உலகில் மகாபலி என்ற பெயரோடு மகா சக்தி வாய்ந்த அரசன் ஒருவன் ஆள்கிறான். நல்ல குணசீலன், ஆட்சியையும் திறம்படி நடத்துகிறான். அவனது சீலம் காரணமாகவே வானுலகம் பூவுலம் எல்லாம் அவன் ஆளுகைக்குள் வந்து விடுகிறது. இதன் பின் அவன் ஓர் அரிய யாகத்தையும் செய்ய முற்படுகிறான். இந்த யாகம் நிறைவேறினால் மகாபலிக்கு இன்னும் எவ்வளவோ சக்தி வந்துவிடுமே என்று தேவர்கள் அஞ்சுகிறார்கள். திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள் மகாபலிக்கு முக்தியை அருளவேண்டும் என்று அவருக்குமே ஆசை. அதற்காக அவர் காசிப முனிவருக்கு அவர் மனைவி அதிதி வயிற்றில் பிள்ளையாக அவதரிக்கிறார். பிறக்கும் போதே குள்ளமான வடிவத்தோடு பிறக்கிறார். அந்தக் குள்ள வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றன. எதுபோல என்றால், கம்பன் கேள்வி கேட்டுக்கொண்டு, அதற்கு விடை சொல்கிறான். கோடிகோடி வருஷங்களாக ஆலமரத்தில் உள்ள அற்புதத் தத்துவங்கள் எல்லாம் பரம்பரையை ஒட்டி, விடாமல் வந்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ கோடி வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக நிற்கவும் போகின்றன. அற்புதத்தில் அற்புதம் என்னவென்றால் எவ்வளவோ விரிந்தும், ஆதி அந்தம் என்றெல்லாம் இல்லாத இந்த ஆலின் தத்துவம் எல்லாம், தெண்ணீர்க்