பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

வேங்கடம் முதல் குமரி வரை

வளர்த்திருக்கிறார்கள். மலையை அடுத்த பிரதேசமானதால் நல்ல குளிர் சோலைகளும் இவ்வூரில் நிரம்பியிருக்கும். காரில் போகிறவர்கள் வடக்கு மதிலில் உள்ள ஒரு பாதை வழியாக நுழைந்து கோபுர வாயிலுக்கே சென்று விடலாம். மற்றவர்கள் கீழமாட வீதி வந்து கோயிலுள் நுழையலாம். பிரதான வாசலில் கோபுரம் இல்லை. அந்த வாசல் வழி நுழைந்து மட்டை அடி மண்டபத்தையும் கடந்து வந்தால் ரதி மண்டபம் வந்து சேர்வோம். அந்த மண்டபமே திருக்குறுங்குடி ஜீயர் மடத்தின் முகப்பு மண்டபமாக இருக்கிறது. அங்கு சிற்ப வடிவங்கள் உள்ளன. ரதி, அர்ச்சுனன், கர்ணன், தடாதகை முதலிய வடிவங்கள் எல்லாம் நல்ல காத்திரமானவை. இவைகள் எல்லாம் நமக்குக் கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்களை நினைவுபடுத்தும். இந்த மண்டபத்தை அடுத்து வீதியையும் கடந்தால் கோயிலின் பிரதான கோபுர வாயிலுக்கு வருவோம். கற்சுவர்களில் எல்லாம் எண்ணிறந்த சிற்ப வடிவங்கள். ஆதலால் இந்தக் கோபுரத்தையே சிற்ப கோபுரம் என்பார்கள். இந்தக் கோபுர வாயிலைக் கடந்தால் துவஜஸ்தம்ப மண்டபம் வந்து சேருவோம்.

இந்த மண்டபத்தின் வடபுறத்திலேதான் மணவாள மாமுனிகள் சந்நிதி இருக்கிறது. அந்தச் சந்நிதிக்கு முன் அழகான மண்டபம் ஒன்று உண்டு. அங்குள்ள தூண்களில் எல்லாம் அழகு அழகான சிற்ப வடிவங்கள். நரசிம்மனது கோலம் இரண்டு. வழக்கமாக நாயக்கர் சிற்பத்தில் காணும் குறவன் குறத்தி வேறே. அனுமனது வடிவம் எல்லாம் இருக்கும். நல்ல காத்திரமான வடிவங்கள். நுணுக்க வேலைப்பாடுகள் நிரம்பியவை. ஆனால் இந்த மண்டபத்தில் வௌவால்களும் துரிஞ்சல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு அசுத்தம் செய்து வைத்திருக்கும் என்பதையும் தெரிவித்து விடுகிறேன்.

துவஜஸ்தம்ப மண்டபத்தில் ஓர் அதிசயம். அங்குள்ள துவஜஸ்தம்பம். சந்நிதிக்கு எதிரே இராது. கொஞ்சம் வடபக்கமாக விலகி இருக்கும். இது என்ன திருப்புன்கூரில் நந்தி விலகிய மாதிரி இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும் நமக்கு. உடனே அர்ச்சகர் சொல்வார் 'ஆம், இங்கும் நம்பாடுவான் என்னும் பக்தனுக்காகத்தான்