பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வேங்கடம் முதல் குமரி வரை

ராமானுஜர் இட்ட பெயரே வைஷ்ணவ நம்பி என்பதாகும்.

அழகிய நம்பி யையும் வைஷ்ணவ நம்பி யையும் தொழுது வெளிவந்து பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றினால் தென்பக்கத்தில் லக்ஷிமிநரசிம்மனும், ஞானப்பிரானான லக்ஷிமிவராகனும் தனித் தனிக் கோயிலில் இருப்பர். குறுங்குடி வல்லித் தாயாருக்கும் ஒரு தனிக்கோயில் உண்டு. மேலப் பிராகாரத்தில் தசாவதாரப் பெருமாள், ஸ்ரீனிவாசன், ஆண்டாள் எல்லாம் காட்சி கொடுப்பர். இவர்களையெல்லாம் தரிசித்துக் கொண்டு வடக்குப் பிராகாரத்தில் நடந்து தெற்கே திரும்பினாால் அங்கு ஒரு கோயில், அக்கோயிலில் சிவபிரான் லிங்க உருவில் இருப்பார். இவரையே மகேந்திர கிரிநாதர் என்றும் பக்கம் நின்ற பிரான் என்றும் அழைக்கின்றனர்.

இக்கோயிலுள் நடராஜர், சிவகாமி, சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், எல்லாரும் செப்புச் சிலை வடிவில் குடும்பத்தோடு எழுந்தருளியிருக்கின்றனர். இவருக்குப் பக்கத்திலேயே கால பைரவருக்கும் தனிச் சந்நிதியிருக்கிறது. இதுவரை நமது க்ஷேத்திராடனத்தில் பெரிய பெரிய சிவன் கோயில்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைத்தான் கண்டிருக்கிறோம். இத்தலம் ஒன்றிலேயே பெரியதொரு பெருமாள் கோயிலில் சிவனும் பக்கம் நிற்கும் பிரானாக இருக்கிறார். சைவ வைஷ்ணவ பேதங்கள் எல்லாவற்றையும் அகற்ற, நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் முயன்றிருக்கிறார்கள் என்பதை நாம் அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறதல்லவா? இந்தப் பக்கம் நிற்பவர் பக்கத்திலேயே வீற்றிருந்த நம்பியும், பள்ளி கொண்ட நம்பியும் தனித் தனிக் கோயிலில் இருக்கிறார்கள். இவர்கள் பக்கத்தில் பூமியில் அழுத்தப் பெற்ற மகாபலியும் இருக்கிறான், தலையைக் கொஞ்சம் பூமிக்கு வெளியில் நீட்டிக் கொண்டு. கோயிலுள் நின்ற நம்பி என்னும் அழகிய நம்பி, வைஷ்ணவ நம்பி, வீற்றிருந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பியை எல்லாம் பார்த்து விட்டோம். இன்னும் கம்பீரமான நம்பி ஒருவன் உண்டு, அவன் மலைமீது ஏறி நிற்கிறான். அவனை மலைமேல் நம்பி என்பர். அவன் கோயில் கொண்டுள்ள இடம் இக்கோயிலில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. இரண்டு மூன்று மைல் வரைதான் வண்டிகள் செல்லக் கூடும். அதன்பின் இரண்டு மைல் நடந்தே செல்ல வேணும். அங்கே ஏழு எட்டடி உயரத்தில் மலைமேல் நம்பி சிலை உருவில். கம்பீரமான