பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

247

பார்த்திருக்கிறோம். ஆனால் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் ஒன்றாக இணைந்து நிற்கும் கோவத்தை-சிருஷ்டி திதி, சக்கரம் என்னும் முத்தொழில் செய்பவர்கள் மூவரும் இணைந்து நிற்கிற கோலத்தை நாம் இதுவரையில் காணவில்லை. அந்தத் தாணு, மால், அயன் மூவரும் இணைந்து நிற்கும் கோலத்ைைதக் காண்பதற்குச் சுசீந்திரம் என்ற தலத்துக்குச் செல்ல வேண்டும்.

சுசீந்திரம் செல்ல, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து முதலில் நாகர்கோயில் செல்ல வேணும். அங்கிருந்து கன்யாகுமரி செல்லும் பாதையில் நாகர்கோவிலிலிருந்து மூன்று மைல் சென்றால் சுசீந்திரம் வந்து சேரலாம். கார் வசதி உள்ளவர்கள் காரிலேயே செல்லலாம். இல்லையென்றால் பஸ்ஸிலேயே செல்லலாம். பழையாறு என்ற ஆற்றின் கரையில் இருக்கிறது சுசீந்திரம். ஆற்றின் தென் கரையிலிருந்து முந்நூறு அடி தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் வாயில் செல்லுமுன்பே கோயிலுக்கு உட்புறம் உள்ள தெப்பக் குளத்தைப் பார்க்கலாம். அங்கு இறங்கிக் கால் கைகளையெல்லாம் சுத்தம் செய்து கொள்ளலாம். கையில் காமரா இருந்தால் கோயில் கோபுரத்தையும் குளத்தையும் சேர்த்து ஒரு படம் பிடித்துக் கொள்ளலாம், நல்ல அழகான படமாக அது அமைவதைத்தான் பார்த்திருக்கிறோமே.

கோயில் வாயிலில் நூற்றி முப்பத்தி நான்கு அடி உயரமுள்ள கோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கும். இங்கேயுள்ள கோபுரத்தின் முன்னர் உள்ள மண்டபத்தின் மேல் முகப்பில் சுதையால் செய்த சிலைகள் உண்டு. நடுவில் சிவ பெருமான் இடபாரூடராய் தேவியோடு எழுந்தருளியிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் மகாவிஷ்ணு கருடாரூடராய்க் காட்சி அளிக்கிறார். இனி மண்டபத்துள் நுழையலாம். இது 132 அடி நீளமும் 32 அடி அகலமும் 24 அடி உயரமும் உள்ள பெரிய மண்டபம், பெரிய பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. தூண்களின் மேல், பாயும் சிங்கங்கள் இருக்கின்றன. மண்டபத்தின் மேற்குக்கோடி கூரைக்குக் கீழே பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து தவக்கோலத்தில் இருக்கும் சிலை ஒன்று இருக்கிறது. தேவியர்