பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வேங்கடம் முதல் குமரி வரை

பிரியர். காலை உதயமானது முதல் இரவு எட்டு மணி வரையில் அபிஷேகங்கள் நடந்து கொண்டிருக்கும். பன்னீர், சந்தனம், திருநீறு என்று மாத்திரம் அல்ல. நல்ல பஞ்சாமிர்த அபிமேகம் அவருக்குப் பிரீதியானது. அவருக்குப் பிரீதியோ என்னவோ பக்தர்களுக்குப் பிரீதியானது. அந்த மூர்த்தி போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராயிற்றே, அவர் சிலை வடிவில் இருந்தாலும் அது சிலையல்ல. ஒன்பது வகை மருந்துச் சரக்குகளால் ஆகிய நவ பாஷாணத்தை ரஸக் கட்டாய்த் திரட்டிச் செய்யப்பட்டவராயிற்றே. அவர் மேனியில் வழிந்து வரும் எப்பொருளுமே மக்களது நோய்களையெல்லாம் தீர்க்கவல்லது. உயிர்களின் பிறவிப் பிணியையே நீக்கவல்ல ஆண்டவன் உடற்பிணி தீர்ப்பது என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமே இல்லைதானே?

இந்த ஆண்டவனைப் பற்றி ஓர் ஐயம் அன்பர்களுக்கு. இவன் மொட்டை ஆண்டியா, சடை ஆண்டியா என்று. சாதாரணமாக வெளியிட்டிருக்கும் படங்கள் எல்லாம் இவனைத் தலையை முண்டிதம் செய்து கொண்ட மொட்டையாண்டியாகத்தான் காட்டுகின்றன. அது காரணமாகவே அந்தப் படங்களைப் பூசையில் வைத்துக்கொள்ளப் பலர் துணிவதில்லை. அவன் மொட்டையாண்டியாயிற்றே. நம்மையும் மொட்டை அடித்து விடுவானோ என்று. ஆனால் மூர்த்தியின் வடிவை அபிஷேக காலத்தில் கூர்ந்து நோக்குவோர்க்குத் தெரியும். அவன் மொட்டை ஆண்டி அல்ல சடையாண்டியே என்று. மேலும் அவனை வணங்குபவர், அவனிடம் பிராத்தனை செய்து கொள்பவர் எல்லா நலங்களும் பெறுகிறார்கள் என்பதும் கண்கூடு. தமிழ்நாட்டு அறிஞன் அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான். 'மக்கள் இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட வேண்டுமானால் இவ்வுலகத்தில் தாம் உடைமை என்று கருதுகிற பொருள்களில் உள்ள ஆசையை விட்டுவிட வேண்டும்; அப்படி ஆசையை விடவிடத்தான் பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டு இயற்பால பல.

என்பதே அவர் சொன்ன அருமையான குறள். உண்மைதானே? உலக மக்களுக்கு எல்லா நன்மைப் பேறுகளையும் அளிக்க விரும்பும்