பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வேங்கடம் முதல் குமரி வரை

பெரியாவுடையார் கோயில் என்று ஒன்று இருக்கிறது அதனைப் பழநியில் உள்ளவர்கள் பிரியாவுடையார் கோயில் என்பார்கள். சிறிய கோயிலே என்றாலும் சமீபகாலத்தில் உருவான நல்ல கற்சிலைகள்

கிருஷ்ணாபுரம்

பல இருக்கின்றன. அவற்றில் தட்சிணாமூர்த்தி மிகமிக அழகு வாய்ந்தவர். அவகாசம் உடையவர்கள் வண்டி வைத்துக் கொண்டு அங்கு சென்று கண்டு தொழுது திரும்பலாம்.

கோயில் பழைய கோயில் என்று அங்குள்ள 16 கல்வெட்டுகள் கூறும். இது தவிர, பழநியின் சுற்றுக் கோயில்களும் பல உண்டு, பட்டத்து விநாயகர், வேணுகோபாலப் பெருமாள், சங்கிலி பரமேசுவரர், வேளீசுவரர் எல்லோரும் இருக்கிறார்கள் இங்கே. எல்லோருமே ஆண்டவனை மலைமேல் ஏற்றிவிட்டு அவன் கால் நிழலில் ஒதுங்கி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். பழநிமலையில் நல்ல மூலிகைகள் பல கிடைக்கின்றன. அதனாலேயே வைத்தியசாலைகள் பல இவ்வட்டாரத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இந்த வைத்திய நாதர்களுக்கெல்லாம் மேலான வைத்திய நாதன்தான் மலை மீதே ஏறி நிற்கிறானே! அவனை வணங்கி அருள் பெறுவதை விட உடலுக்கும் உயிருக்கும் வைத்தியம் வேறே செய்து கொள்ள வேண்டுமா என்ன?