பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

31

பதினெண்பூமி விண்ணகரம் என்றும் கூறுகிறார்கள். பாறையில் குடைந்த மூலக்கிருஹமும் அதற்கு முன்னால் அர்த்த மண்டபமும் இருக்கின்றன. நான்கு தூண்களோடு அக்குடைவரை வெட்டப்பட்டிருக்கிறது. கருவறையில் மூர்த்தி இல்லை. அர்த்த மண்டபத்தில் பன்னிரண்டு கோலங்களில் மகாவிஷ்ணு உருவாகியிருக்கிறார். பிரயோக சக்கரமும் சங்கமும் ஏந்திய திருக்கோலங்கள் அவை. குடைவரையின் முன் பகுதியில் யானைகள், யாளிகள் முதலியவை சிறிய அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இது ஆதியில் ஜைன ஆலயமாக இருத்து பின்னர்தான் மாணிக்க ஆழ்வார் கோயிலாகியிருக்கிறது.

பழியிலி ஈச்சரமும் குடைவரைக் கோயிலே. எட்டு அடி நீளமும் ஏழு அடி அகலமும் ஆறரை அடி உயரமும் கொண்ட சிறிய குடைவரையே இது. பல்லவ நிருபதுங்கனது ஆட்சியில் விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி இக்குடைவரையைக் குடைவித்தான் என்று சாஸனம் கூறுகிறது. சாத்தன் பழியிலி பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவன். இக்குடைவரையில் துவாரபாலகர் உருவங்களும் பூதகணங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

பதினென் பூமி விண்ணகரம் என்னும் சமணர் குடைவுக் கெதிரேதான், விஜயாலய சோழீச்சரம் காட்டப்பட்டிருக்கிறது. இக்கோயில் ஒரு பிரதான கோயிலையும் உடையதாய் இருந்திருக்கிறது. பிரதான கோயில் மேற்கே பார்த்தது. இக்கோயிலின் கர்ப்பகிருஹம் ஓங்கார வடிவத்தில் இருக்கிறது. குறுக்கில் ஒன்பதடியும் உயரத்தில் எட்டு அடியும் உடையதாக இருக்கிறது. சுவரின் கனமோ ஐந்து அடிக்குக் குறைவில்லை. நான்கு மூலைகளும் சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. இது முழுதும் 29 அடி சதுரம் உள்ள ஒரு மண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. கருவறைக்கு மேலே அதே மாதிரி இரண்டு தளங்கள் வேறே இருக்கின்றன. சிகரம் வரவரக் குறுகிக் கடைசியில் ஒரு ஸ்தூபியுடன் விளங்குகிறது. இதற்கு முன்னோடியாக இருந்தது மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ரதம்தான். இந்தக் கட்டிட முறையைப் பின்பற்றியே