பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வேங்கடம் முதல் குமரி வரை

ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு விமானம் எழுப்பியிருக்கிறான்.

இக்கோயிலின் நான்கு பக்கங்களிலும் நான்கு சிம்மலாடங்கள் இருக்கின்றன, அவைகளுக்கு இடையில் கீழ்வரிசையில் நான்கு திக்கிலும் நான்கு ரிஷபங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயிலைச் சுற்றிய நான்கு புரைகளில் {Nlches} கற்சிலைகள் உண்டு. மேற்கில் சிவனும் பார்வதியும் தெற்கில் வீணாதர தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபம். அங்கு சுவரில் அடங்கிய அரைத் தூண்களில் இருக்கின்றன. இதன் வெளிப்புறத்தில் புரைகள் இல்லை. மண்டபத்தைத் தாங்க நல்ல கற்றூண்கள் இருக்கின்றன, தூண்களின் மேலுள்ள போதிகைகள் எல்லாம் பல்லவர் காலத்தியவைபோல் வெகு சாதாரணமாகவே இருக்கின்றன.

அந்த மண்டபத்தின் வாயிலில் துவார பாலர்கள் ஐந்து அடி, உயரத்தில் கம்பீரமாய் எழுந்து நிற்கிறார்கள். ஒரு கையில் கதை இருக்கிறது. மற்றொரு கையில் விஸ்மயக்குறி-அதாவது லியப்புக்குறி இருக்கிறது. சடாமகுடம் தரித்தவர்களாக இருக்கும் அவர்கள் தலையில் கொம்புகள் போல் இரண்டு வளைவுகள் இருக்கின்றன. காதில் மகர குண்டலம், உடம்பில் கடிபந்தம், உதரபந்தம், சலங்கை போன்ற குஞ்சலத்துடன் முறுக்கிய யக்ஞோபவீதமும், கையில் கடகங்களும் அணிந்தவர்களாக அவர்கள் கானப்படுகிறார்கள். பின்னர் சோழர்கள் கட்டிய கோயில்களின் துவாரபாலகர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக அமைந்தவர்கள் இவர்களே என்று தெரிகிறது.

இந்த மூலக்கோயில்களைச் சுற்றித்தான் ஏழு சுற்றுக் கோயில்கள் இருந்திருக்கின்றன, இன்று இருப்பவை ஆறு கோயில்களே, சூரியன், சப்த மாதர், சுப்பிரமணியர், கணபதி, ஜேஷ்டாதேவி, சண்டீசர், சந்திரன் இவர்களுக்கு எனத் தனித்தனிக் கோயில்கள். எல்லா கோயில்களும் கல்லால் கட்டிய கோயில்கள். அஸ்திவாரம் முதல் ஸ்தூபி வரையில் முழுக்க முழுக்க கருங்கல்லே.