பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

35

காதல் கிழத்தியான கணிகை ஒருத்திக்குக் கொடுத்து விடுகிறார். அரசன் வந்திருக்கிறான் என்பது அறிந்த - அர்ச்சகர் அந்த மாலைகளைப் போய் எடுத்து வந்து அதில் ஒரு மாலையை மன்னனிடம் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு மயிர் இருப்பதைக் கண்டு கோபங்கொண்ட அரசனிடம் அர்ச்சகர் தைரியமாகவே,

கொடும்பாளூர் கோயில்

'இறைவனுக்குச் சிகை உண்டு. அந்தச் சிகை மயிரே அது' என்று சொல்லியிருக்கிறார். அர்ச்சகர் சொல்லைக் காக்கவே இறைவன் அன்று முதல் சிகையையும் ஏற்றுச் சிகாநாதர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.

சிகாநாதர் இருக்கும் கோயிலே குடுமியான் மலைக்கோயில். இங்கு பெரிய பெரிய மண்டபங்கள், மச்சாவதாரம் முதலிய சிற்ப வடிவங்கள், ஆஞ்சநேயர், வாலி, சுக்ரீவன் எல்லோரும் வேறே வந்து இடம் பிடித்து உட்கார்ந்து கொள்கிறார்கள் சிலைவடிவங்களில், சிகா நாதரும் அவரது துணைவி அகிலாண்டேசுவரியும் குடைவரைக்குள் இருக்கிறார்கள். நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் எல்லாம் பின்னால் எழுந்திருக்கின்றன. இக்கோயில் மேல் பிராகாரத்திலுள்ள மலையைச் செதுக்கிச் சுவர்போலாக்கி அதிலே மன்னன் மகேந்திரவர்மன் ஒரு சிறந்த சங்கீத சம்பந்தமான தகவலை வெட்டி வைத்திருக்கிறார். இது கிரந்த எழுத்தில் இருக்கிறது. வெட்டிய மன்னன் தன்னை ருத்ராச்சாரியார் சிஷ்யன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதினால் அவனை மகேந்திரவர்மன் என்று கூற முடிகிறது. பரத நாட்டிய நூலுக்கும் சாரங்கதேவர்