பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வேங்கடம் முதல் குமரி வரை

நம்பி ஒரு நிபந்தனையுடன் திருமந்திர உபதேசம் செய்ய இசைசிறார். நிபந்தனை இதுதான்; அவர் கற்கும் மந்திரத்தை ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதே. குருவின் நிபந்தனைக்கு உட்பட்டே உபதேசம் பெறுகிறார். ராமானுஜர். ஆனால் உபதேசம் பெற்ற உடனேயே அஷ்டாங்க விமானத்தில் ஏறி ஊராரையெல்லாம் 'வாருங்கள் வாருங்கள்' என்று கூவி அழைத்து, தாம் பெற்ற இன்பத்தை உலகிலுள்ளோரும் பெறட்டும் என்று மந்திர உபதேசம் செய்துவிடுகிறார். தான் ஒருவன் குருவின் கட்டளையை மீறியதால் நரகம் புகுவதானாலும், உலகம் உய்யட்டும் என்ற நல்லெண்ணம் அவரிடம் இருந்ததையறிந்த நம்பிகளும் அவரை அன்று முதல் எம்பெருமானார் என்றே அழைக்கிறார்.

பெரியாழ்வாரது வாழ்வோடு இத்தலம் நெருங்கிய தொடர்பு உடையது. ஸ்ரீவில்லிப்புத்தூர் வாசியான பெரியாழ்வார் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். இங்கு ராஜ புரோகிதராகவும், பரம பாகவதராகவும் இருந்த செல்வநம்பியைக் கண்டு அளவளாலியிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஸ்ரீஜயந்தி நாளிலே திருக்கோட்டியூர்த் திருமாலை வணங்க, அவரது எண்ணமெல்லாம் துவாபர யுகத்திலே சென்றடைந்திருக்கிறது. கோட்டியூர் நந்தகோபன் மாளிகையாகவும், அங்குள்ள கோகுலம் ஆய்ப்பாடியாகவும், கோயிலில் உள்ள நர்த்தனமூர்த்தி கண்ணனாகவும் காட்சி கொடுத்திருக்கின்றனர். அப்படி அவர் பெற்ற அனுபவத்தில்தான்,

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அன்று ஆயிற்றே

என்று தொடங்கும் பாடல்களைப் பாடி மகிழ்ந்திருக்கிறார். இத்தலத்திலுள்ள பரம பாகவதர்களையும், நினைந்து நினைந்து,

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
புலன்கள் ஐந்து, பொறிகளால்