பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வேங்கடம் முதல் குமரி வரை

தருண மங்கையை மீட்பது
ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல்
நூல்நெறி அடுக்கிய புல்லிவ்
கருணை அம் கடல் கிடந்தது.
கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி

என்று. இப்படிப் புல்லணைமேல் கிடந்து வருணனை வேண்டிய தலம்தான் திருப்புல்லணை. அதனையே திருப்புல்லாணி என்கிறார்கள், அந்தத் திருப்புல்லாணிக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருப்புல்லாணி ராமநாதபுரத்துக்குத் தெற்கே கீழக்கரை செல்லும் பாதையில், ராமநாதபுரத்திலிருந்து ஆறு ஏழு மைல் தொலைவில் இருக்கிறது. ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்கி, வண்டி வைத்துக்கொண்டு போகலாம். சொந்தக் கார் இருந்தால் 'ஜாமி ஜாம்' என்று காரிலேயே போய் இறங்கலாம். ஊர் மிகச் சிறிய ஊர். கோயில் பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல. 'கள்ளவிழும் மலர்க்காவியும், தூமடல் கைதையும் புள்ளும் அள்ளற் பழனங்களும், சூழந்த புல்லாணி' என்று அன்று மங்கை மன்னன் பாடியிருக்கிறான், இன்று அள்ளற் பழனங்களையோ மலர்க் காவிகளையோ பார்த்தல் அரிது. கடற்கரையை ஒட்டிய கிராமம் ஆனதால் மணல் குன்றுகளுக்குக் குறைவில்லை என்றாலும் கோயில் வாயில் சென்று சேரும்வரை நல்ல ரோடு இருக்கிறது. இங்குதான் புல்லர், கண்ணுவர், காலவர் முதலிய முனிபுங்கவர்கள் தவம் புரிந்து முத்தி பெற்றிருக்கிறார்கள். முனிவராம் புல்லர் விரும்பியபடியே ஜனார்த்தனன். தேவியர் மூவரோடும் சதுர்புஜத்தோடும், பஞ்சாயுதங்களோடும், ஸ்ரீவத்சம், கௌஸ்துபம் முதலிய மாலைகள் விளங்க, பீதாம்பரமும் அனிந்து திவ்வியாபரணங்களும் தரித்து எழுந்தருளியிருக்கின்றார். இன்னும் இத்தலத்திலே தேவலர் என்னும் முனிவர் தவம் செய்யும்போது சப்த கன்னியரும் அங்குள்ள