பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நண்பர் பாஸ்கரன்
(ஜி.ஸி. பட்டாபிராம்)

ண்பர் பாஸ்கரன் என்னுடைய நீண்ட நாளைய நண்பர், தமிழ் நாட்டில் எத்தனையோ கோயில்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து போயிருக்கிறோம். நண்பர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறோம். தமிழ்நாட்டில் இவர் போகாத கோயிலே கிடையாது. காரில் போக முடியாவிட்டால் ஜீப்பில் போவார். அதிலும் போகமுடியாவிட்டால் நடந்தே செல்வார். கோனேரி ராஜபுரம் நடராஜரைப் பற்றியும், ஆக்கூர் ஆயிரத்திலொருவரைப் பற்றியும், அனந்த மங்கலம் விஸ்வரூப அனுமனைப் பற்றியும், பெரும்பள்ளம் வீணாதர பிக்ஷாடனரைப் பற்றியும் இதுவரை யாருக்குத் தெரியும்? இவர் கட்டுரைகளைப் படித்து, அவ்வூர்கள் எங்கிருக்கின்றன என்று விசாரித்து, அந்த அற்புதமான விக்ரகங்களைப் பார்த்து பரவசப்பட்டார்கள் கலா ரசிகர்கள். தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி அழகிய கட்டுரைகளை கல்கியில் தொடர்ந்து எழுதினார். இரண்டு மூன்று பக்கங்களுக்குள் கோயிலின் மகிமை, அக்கோயில் சிற்பங்களின் அழகு, அந்த ஊரைப் பற்றிய சில சாஸனங்கள் எல்லாவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். அவற்றைத் தொகுத்து, நான்கு புத்தகங்களாக, வேங்கடம் முதல் குமரி வரை என்ற